தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் 4 சக்கர வாகன முன்பணம் ஆகியவற்றைப் பெறுவதற்கான விண்ணப்பம், ஒப்பளிப்பு மற்றும் நிதி வழங்கும் நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை அக்டோபர் 15-ந் தேதி அரசாணை (நிலை) எண் 223-ஐ வெளியிட்டுள்ளது.
அரசாணையில் ஏற்கெனவே உள்ள நடைமுறைகள், தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் இனிமேல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவை ஒப்பீட்டு அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளன.


எப்போது அமலுக்கு வருகிறது?
மேற்கண்ட திருத்திய நடைமுறைகள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து கணினி முன்பணம், இருசக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
