நீலகிரிக்கு 3 நாட்கள் வராதீங்க.. மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்- இரவு நேர அரசு பேருந்துகளும் நிறுத்தம்!

Published On:

| By Mathi

Rail-Nilgiri

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர அரசு பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் பர்லியாரில் 25 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. கீழ்கோத்தகிரி எஸ்டேட்டில் 20 செ.மீ., அளக்கரை எஸ்டேட்டில் 16.1 செ.மீ., கோத்தகிரியில் 13.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 24 முதல் 26 வரை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த கனமழையால் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று (அக்டோபர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 நாட்களுக்கு வானிலை சீராகும் வரை பொதுமக்கள் நீலகிரிக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அடுத்த 3 நாட்களுக்கு அவசரகால வாகனங்கள் தவிர்த்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பேருந்துகளும் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து பொது இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share