அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இன்றைய கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டததில் எடுக்கப்பட்ட முடிவு

  • 8 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் அது முடிந்தபிறகு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக நீதி ஆணையம் அமைத்து கணக்கெடுப்பு நடைபெறும்.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழம்பூர் கிராம மக்களுக்கு அவர்களின் நிலம் ஒப்படைக்கும் பொருட்டு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கோ அல்லது இஸ்லாமிற்கோ மதம் மாறினால் இடஒதுக்கீடு கோர முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மின் வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் மக்களின் தேவையறிந்து செயல்படவும் அவர்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share