திமுக முன்னாள் எம்எல்ஏ நந்தகுமார், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Published On:

| By Pandeeswari Gurusamy

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் காந்தி நகர் பகுதியில் அனைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் மாவட்டசெயலாளருமான நந்தகுமார் வீட்டில் 10 பேர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நகராட்சித்துறை அமைச்சராக இருந்த நேருவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ள நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திமுக தொண்டர்கள் நந்தகுமாரின் வீட்டின் அருகே குவிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இவர் உறவினர்கள் நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் ஒப்பந்ததாரர்களாக உள்ளனர். குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால் ஒப்பந்த பணிகளையும் இவருக்கு சொந்தமானவர்கள் தான் எடுத்து நடத்தினார்கள் என கூறப்படுகிறது மேலும் துப்புரவு பணிகளிலும் இவர்கள் தான் ஒப்பந்தம் எடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் காட்பாடி காந்தி நகரில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபல் இதேபோல் நாமக்கல்லில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.”

ADVERTISEMENT

முன்னதாக இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிற்கு சொந்தமான திருச்சி வீடு அவரது சகோதரர்களுக்கு சொந்தமான கோவை மற்றும் சென்னை வீடுகள் உள்ளிட்ட சுமார் 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் முன்னாள் எம்எல்ஏ நந்தகுமார், முனனாள் எம்எல்ஏ ராமலிங்கத்தின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share