நா.மணி
காலையில் எத்தனை மணிக்கு நீங்கள் சுகாதாரப் பணியாளர்களை பார்க்கிறீர்கள்? எத்தனை மணிக்கு அவர்கள் எழுந்து தயாராகி அலுவலகம் சென்று வருகைப் பதிவு கொடுத்து பணிக்கு வந்திருப்பார் தெரியுமா?
நகரங்களில் இருப்பவர்கள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து ஒருமுறை நகர்வலம் வாருங்கள். காய்கறிகள், கீரைகள், தேங்காய், பூ சுறுசுறுப்பாக விற்றுக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் ஒரு தோராயமான கணக்கு போடுங்கள். அதில் பெண்கள் எத்தனை பேர்? ஆறுமணிக்கே வேலைக்கு வந்துவிடும் கட்டுமான தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். TN Budget 2025

கிராமங்களில் எனில் ஆறுமணிக்கு எழுந்து அருகில் உள்ள நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர், விவசாய வேலைகளுக்கு செல்வோர் என தோராயமான கணக்கு போடலாம். இவர்கள் எத்தனை மணிக்கு எழுந்து சமைத்து அதிகாலை வேலைக்கு தயாராகி வந்திருப்பார்கள்? இவர்களது பிள்ளைகள் எத்தனை மணிக்கு தூக்கம் விழிப்பார்கள்?
யார் எழுப்பி விடுவார்கள்? யார் குளித்து விடுவார்கள்? யார் சாப்பாடு போட்டு கொடுப்பார்கள்? எண்ணிப் பார்த்திருக்கிறோமா? நன்றாக குளித்து நன்றாக சாப்பிட்டு பள்ளி செல்வார்களா? அவசர அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார வசதிக்கு ஏற்ப சாப்பாடு செய்து விட்டு போவார்கள். TN Budget 2025
தானாக உண்டு உடுத்திTN Budget 2025
இந்தப் பிள்ளைகள் தானாகவே உண்டு பள்ளி செல்வார்கள் என்று உத்தரவாதம். பற்றாக்குறைக்கு அவர்களுக்கு விளையாட்டு மனப்பான்மை வேறு. நன்கு பசிக்கும் போது தான் சாப்பிடவில்லை என்ற உணர்வு குழந்தைகளுக்கு மேலிடும். அப்போது பள்ளிக்கு வந்துவிடும். பசியின்றி இருந்தாலே படிப்பில் கவனம் செலுத்துவது கடினம். பசியோடு எப்படி கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுவார்கள்?

காலை உணவு இல்லையேல்… TN Budget 2025
என்பதுகளில் அரசு நடத்தி வரும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள் அனுபவம் இது. 55 மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் காலை உணவாக நான்கு இட்லி கிடைத்தால் அது பெரிய விசயம். சில நாட்கள் மூன்றாகவும் குறைந்து விடும். இந்த நான்கு இட்லியும் காலை ஏழு மணிக்கே வழங்கப்பட்டு விடும்.
குறைந்த பட்சம் 17 வயது முதல் 23 வயது வரை உள்ள மாணவர்கள். பத்து மணிக்கு கல்லூரி செல்லத் தயாராகும் போதே கபகப என வயிறு தொடங்கிவிடும். மதிய உணவுக்கு முன் வரும் மூன்று பாட வேலைகளை எப்படிப் படிப்பது? உள்வாங்கிக் கொள்வது? வளர்ந்த மாணவர்கள் நிலையே இப்படி எனில் ஐந்து வயது முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகள் நிலைமை சொல்லவும் வேண்டுமோ!. TN Budget 2025

பசியின்றி கற்றல்: TN Budget 2025
இப்போது இருபது லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் வழியாக பலன் பெறுகிறார்கள். இந்த இருபது லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் மனங்களில் எழும் மகிழ்ச்சியை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அவசர அவசரமாக அரைகுறையாக சமையல் செய்ய வேண்டும் என்று நிலைமை இல்லை.
குழந்தைகள் பள்ளிக்கு சாப்பிட்டு விட்டு சென்றார்களா என்ற ஏக்கம் இல்லை. பல பெற்றோர்களுக்கு வீடு வந்து சேரும் வரை அந்த எண்ணம் இருக்கும். இப்போது அது தேவையில்லை. “பசியின்றி படித்தல் என்ற சூழல் உருவாக இந்தக் குழந்தைகளுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதா?” என பெருமூச்சு விடுவதா? இப்போதாவது பசியுடன் கற்றல் என்ற சூழல் பறந்து போகும் நிலை உருவானதே என மகிழ்ச்சி கொள்வதா? TN Budget 2025
காலை உணவு திட்டத்தின் மகிமை யாருக்கு தெரியும்?:
இதனைப் புரிந்து கொண்டவர்களுக்கு தமிழ் நாடு அரசு பள்ளிகளில் காலை உணவு அளிப்பதின் மகிமை தெரியும். இதனைத் தான் அமெரிக்க நாட்டின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ராம் Empathetic joy என்கிறார்.
அது இல்லையெனில், “வாக்கு வங்கி அரசியல்” என எளிதாக எள்ளி நகையாடி விட்டு புறந்தள்ளி விடலாம். காலை உணவுத் திட்டம் இப்போது 30,992 அரசுப் பள்ளிகளிலும் 3,995 ஊரக அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அமலில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 600 கோடி இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் சராசரியாக இதற்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் செலவு செய்கிறது அரசு.

காலை உணவு வகைகள்N Budget 2025
காலை உணவு திட்டத்தில் வெண்பொங்கல், சேமியா, கிச்சடி, ராகி சேமியா, கோதுமை உப்புமா வெள்ளை ரவை உப்புமா என விதவிதமாக உணவு பரிமாறப்படுகிறது. வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து இங்கும் கொஞ்சம் சாப்பிடும் குழந்தைகள் இருக்கிறார்கள். இவ்வளவு சிறந்த திட்டத்தை இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தலாம்.
நெருடல் நீங்க வேண்டும்:TN Budget 2025
ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகள் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் , ஒரு குழந்தை ஐந்தாம் வகுப்பு படிக்கிறது. மற்றொன்று ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு காலை சத்துணவு. அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு காலை உணவு இல்லையேல் எப்படி இருக்கும்? காலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு சமைத்து தர வேண்டும். ஐந்தாம் வகுப்பு குழந்தை பள்ளியில் சாப்பிட்டுக் கொள்ளும் என்றால் அது ஒரு நெருடல் தானே. மேலும், ஓர் நெருடலான விசயம், நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எத்தனை குழந்தைகள் இருந்து விடுவார்கள்?
ஒருபகுதி குழந்தைகள் சாப்பிடும் போது மற்றொரு பகுதி குழந்தைகள் சாப்பிடாமல் இருத்தல் சற்று ஆரோக்கியமாக தெரியவில்லை. இதனை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும்.
நிர்வாக ரீதியாக சரி செய்ய வேண்டியவை
•ஒவ்வொரு நாளும் காலை உணவு கொடுத்த பிறகு APP வழியாக பின்னூட்டம் கேட்கப்படுகிறது. மொத்தமுள்ள எத்தனை பள்ளிகளில் “நன்றாக இருந்தது” என பின்னூட்டம் வருகிறது. எத்தனை பள்ளிகளில் பரவாயில்லை. சுமார் போன்ற பின்னூட்டம் வருகிறது என ஒட்டுமொத்த பரிசோதனை செய்ய வேண்டும். எல்லா நாட்களிலும் எல்லாப் பள்ளிகளிலும் “முற்றிலும் நன்று” அல்லது பின்னூட்டம் அவ்வப்போது அனுப்பவில்லை என்றால் அதனை பரிசோதிக்க வேண்டும்.

•ஒரு பள்ளியில் படிக்கும் 80 விழுக்காடு மாணவர்கள் தான் காலை உணவு சாப்பிடுவார்கள். மீதமுள்ள மாணவர்கள் ஒன்று சாப்பிட்டு விட்டு வந்து விடுவார்கள் அல்லது பள்ளிக்கு வர மாட்டார்கள் என்ற ஓர் மதிப்பீட்டின் அடிப்படையில் 80 விழுக்காடு மாணவர்களுகே உணவு தயாரிக்கப்படுவதாக கூறுகின்றனர். எதிர்பார்க்கும் அளவை விட மாணவர்கள் அதிகமாக வந்தால் அல்லது காலையில் வீட்டில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு இங்கும் வந்து சாப்பிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது?
•நகர்புறங்களில் மட்டுமே ஒரே இடத்தில் சமைத்து பல பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று கொடுத்து வருகின்றனர். கிராமப்புறங்களில் அந்தந்த பள்ளியிலேயே சமைத்து கொடுக்கின்றனர். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெற்றோர்களே பள்ளியில் சமையல் செய்ய தகுதியானவர்கள்.

காலை உணவு சமைத்து கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விடலாம் என்றே பகுதி நேரப் பணிக்கு வருகிறார்கள். அதில் இவர்களை “கூட்டம் கூட்டம் என பல நாட்கள் அழைப்பதால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. இதன்காரணமாக பணியில் தொடராமல் போவதும் அதன் காரணமாக வேறு ஆட்களை தேடுவதும் சிரமம். அத்துடன் பணிக்கு வரும் பெற்றோர்களை சமூக நலத்துறை ஊழியர்கள் நடத்தும் விதத்திலும் சிலர் பணிக்கு வர விரும்புவதில்லை என்று கூறப்படுகிறது. இவையும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
கட்டுரையாளர்:

நா.மணி, பேராசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.