தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. tamilnadu police department recruitment
பணியிடங்கள் : 1299
பணியின் தன்மை : காவல் சார் ஆய்வாளர்கள் பிரிவில் ஆண்கள் 654, பெண்கள் 279, காவல் உதவி ஆய்வாளர்கள்(ஆயுதப்படை) ஆண்கள் 255, பெண்கள் 111.
கல்வித் தகுதி : பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்திடமிருந்து அறிவிக்கை தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பள்ளியிறுதித் தேர்வு 10-ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலைக் கல்வி 12-ம் வகுப்பு தேர்வு, ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற பின்னர் 10+2+3/4/5 முறையில் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.36,900 – 1,16,600/-
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும் மற்றும் 30 வயது நிறைவு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும் (02.07.1995 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும் மற்றும் 01.07.2005 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராகவும் இருத்தல் வேண்டும்)
கடைசித் தேதி : 07.04.2025 முதல் 03.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் tamilnadu police department recruitment