“புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்க” : அரசு ஊழியர்களின் அடுத்தக்கட்ட போராட்டம்!

Published On:

| By Kavi

next phase of the protest by government employees

அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர். next phase of the protest by government employees

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கமான புதிதாக உருவாக்கப்பட்ட fota-geo (fota- federation of teachers, geo -government employee association) வலியுறுத்தி வருகிறது. 

நேற்று தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தலைநகர் சென்னையில் பெரியளவில் போராட திட்டமிட்டுள்ளனர். 

இதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னை வரவுள்ளனர். சுமார் 8000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என fota-geo  தரப்பில் கூறப்படுகிறது. 

போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் பெயர், எந்தெந்த துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டமைப்பின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். 

சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், தமிழ்ச்செல்வி, பீட்டர் அந்தோணி ஆகியோர் இந்த போராட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  next phase of the protest by government employees

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share