Asian Athletics Championships : பதக்கங்கள் அள்ளும் தமிழக வீரர்கள்… உதயநிதி பெருமிதம்!

Published On:

| By christopher

TN athletics huge win factor for india at ATC 2025

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்கள் பதக்கங்கள் குவித்து வரும் நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். TN athletics huge win factor for india at ATC 2025

26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. TN athletics huge win factor for india at ATC 2025

ADVERTISEMENT

இதன் 2-வது நாளான நேற்று (மே 28) டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 7,618 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கலப்பு தொடர் ஓட்டத்தில் ரூபால் சவுத்ரி, சந்தோஷ் குமார், விஷால், சுபா வெங்கடேஷன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 3:18.12 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபால் சவுத்ரி பந்தய தூரத்தை 52.68 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதே போன்றும், மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா பந்தய தூரத்தை 4:10.83 விநாடிகளில் எட்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மும்முறை நீளம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் பிரவீன் சித்ரவேல் 16.90 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் யூனுஷ் ஷா பந்தய தூரத்தை 3:43.03 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் விஷால் பந்தய தூரத்தை 45.57 விநாடிகளில் கடந்த 4-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் ஷைலி சிங், அன்சி சோஜன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். தகுதி சுற்றில் ஷைலி சிங் 6.17 மீட்டர் நீளமும், அன்சி சோஜன் 6.14 மீட்டர் நீளமும் தாண்டினர்.

100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி ஹீட்ஸில் பந்தய தூரத்தை 13.18 விநாடிகளில் கடந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நான்கில் மூன்று தமிழக வீரர்கள்!

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ”ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கலப்பு ரிலே அணியில் எங்கள் மூன்று தமிழக விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக எங்கள் எலைட் தடகள வீரர்கள் சுபா வெங்கடேசன், சந்தோஷ் மற்றும் விஷால் ஆகியோருடன் ரூபாலையும் வாழ்த்துகிறேன்.

எங்கள் SDAT இன் ELITE விளையாட்டு வீரர் பிரவீன் சித்ராவெல், டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

தடகளத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகள் சர்வதேச அரங்கில் சிறந்த முடிவுகளைத் தருகின்றன.

எங்கள் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன், மேலும் அவர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல பாராட்டுகளைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share