“மார்ச் மாசம் வந்தாலே மனசுக்குள்ள ஒரு படபடப்பு வரும்ல… அந்த டைம் வந்தாச்சு!” தமிழகம் முழுவதும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஆவலோடு (கொஞ்சம் பயத்தோடும்) எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முக்கியமான அறிவிப்பு இதோ வந்துவிட்டது.
2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
யாருக்கு எப்படி கிடைக்கும்? இங்குதான் மாணவர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஹால் டிக்கெட் எல்லோருக்கும் ஆன்லைனில் கிடைக்குமா?
- பள்ளி மாணவர்கள் (Regular Students): நீங்கள் இன்டர்நெட் சென்டருக்கு ஓட வேண்டியதில்லை. உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரே (Headmaster) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பள்ளி முத்திரையிட்டு உங்கள் கையில் கொடுப்பார். அதனால், ஸ்கூல்ல எப்போ தராங்கனு கேட்டு வாங்கிக்கோங்க.
- தனித் தேர்வர்கள் (Private Candidates): நீங்கள் நேரடியாக இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
டவுன்லோட் செய்வது எப்படி? (தனித் தேர்வர்களுக்கு மட்டும்)
முதலில் www.dge.tn.gov.in என்ற அரசுத் தேர்வுத் துறையின் இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் ‘Hall Ticket’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
அதில் உங்களுடைய விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை (Date of Birth) உள்ளிட்டால், உங்கள் ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.அதை மறக்காமல் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
முக்கியமான செக்லிஸ்ட்: ஹால் டிக்கெட் கைக்கு வந்ததும், சும்மா பைக்குள்ள வைக்காம இந்த விஷயங்களைச் சரிபார்க்கவும்:
- உங்கள் பெயர் (Name) மற்றும் பிறந்த தேதி சரியாக இருக்கிறதா? (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருந்தா உடனே சொல்லுங்க).
- புகைப்படம் (Photo) தெளிவாக உள்ளதா?
- நீங்கள் தேர்வு எழுதிய மொழிப்பாடம் மற்றும் இதர பாடங்கள் (Subject Codes) சரியாக உள்ளனவா?
- தேர்வு மையம் (Exam Centre) எங்கே போடப்பட்டுள்ளது?
ஹால் டிக்கெட் கிடைச்சிருச்சுன்னு அலட்சியமா இருக்காதீங்க. அதுல உங்க போட்டோ இல்லாமலோ அல்லது வேற யாரோ போட்டோவோ இருந்தா, உடனே தலைமை ஆசிரியர் கிட்ட சொல்லித் திருத்தம் செய்யணும். கடைசி நிமிஷத்துல பதறக்கூடாது. முக்கியமா, எக்ஸாம் சென்டர் எங்க இருக்குனு ஒரு நாள் முன்னாடியே போய் பார்த்துட்டு வர்றது புத்திசாலித்தனம். அப்புறம், ஹால் டிக்கெட்டை லேமினேட் பண்ணிடாதீங்க பாஸ்… தேர்வு அறையில் கையெழுத்து போட வேண்டியிருக்கும்!
