மாயமான சிறுவன்… சாலையில் வீசப்பட்ட மனித கை: இளைஞர் கொலையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!

Published On:

| By vanangamudi

Villupuram murder case

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் பகுதியில் நடந்த கொலையில் மூன்று பேர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். Villupuram murder case

கடந்த ஜூன் 15 – 16ஆம் தேதிக்கு இடைபட்ட நள்ளிரவில் புதுச்சேரி திருக்கனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவலர் ஊரைச் சுற்றி வந்துக்கொண்டிருந்தார். Villupuram murder case

அப்போது அவ்வழியே டிவிஎஸ் எக்ஸ்எல்-100 வண்டியில் இருவர் வந்தனர். அவர்கள் வண்டியை அங்கும் இங்கும் அலசியவாறு வேகமாக சென்றதால் சந்தேகமடைந்த ஊர்க்காவலர், தனது பைக்கில் அந்த எக்ஸ்எல்-ஐ துரத்தி சென்றார். ஊர்க்காவலர் துரத்துகிறார் என்றதும், அந்த இருவரும் வண்டியை அதிவேகமாக ஓட்டினர்.

ஒருகட்டத்தில் அந்த இருவரும் தாங்கள் வைத்திருந்த பையை தூக்கி எறிந்துவிட்டு, வண்டியையும் போட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.

இந்தநிலையில், ஊர்க்காவலர் அந்த பையை எடுத்து பார்த்தபோது, அதில் ரத்தக் கறையுடன் இரண்டு கத்தியும், வெட்டப்பட்ட ஒரு மனித கையும் இருந்தது.

உடனே ஊர்க்காவலர் திருக்கனூர் காவல் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு தகவலை சொல்ல, அதே நேரத்தில் காவல்நிலையத்துக்கு வந்த ஒரு தாய், தந்தை, 12 வயது மதிக்கத்தக்க தங்களது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்தனர்.

அப்போது இரவு பணியில் இருந்த அதிகாரி, ஒரு பக்கம் கை கிடக்கிறது என்று போன் வருகிறது… இன்னொரு பக்கம் மகனை காணவில்லை என பெற்றோர் புகார் கொடுக்கின்றனர் என அதிர்ச்சியடைந்தார். Villupuram murder case

எஸ்எஸ்பி கலைவாணன்
Villupuram murder case
எஸ்எஸ்பி கலைவாணன்

உடனே அவர், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர்(எஸ்எஸ்பி) கலைவாணன் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அலர்ட் செய்தார். அதன்படி வாகன சோதனையை தீவிரப்படுத்திய போலீசார், மர்ம நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என தேடுதல் வேட்டையில் இறங்கினார்.

அதேசமயம், மகனை காணவில்லை என்று புகார் அளித்த பெற்றோரிடமும், அவர்களது மகனுடைய புகைப்படத்தை போலீசார் பெற்றனர். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் கையும் வெட்டப்பட்ட கையும் ஒன்றா என சரிபார்த்தனர். இதில் இரண்டு கையும் ஒருவருடையது அல்ல என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த எக்ஸ்எல் வண்டி எண்ணை வைத்து, அது யாருடையது என போலீஸ் ஆராய்ந்ததில், அங்குதான் ட்விஸ்டே ஆரம்பித்தது.

அந்த வண்டி மகனை காணவில்லை என்று புகார் அளித்த பெற்றோரின் வண்டி என்பது தெரியவந்தது. கை சிறுவனுடையது இல்லை… வண்டி சிறுவனின் தந்தையுடையது அப்படியென்றால் அந்த கை யாருடையது? சிறுவன் எங்கே போனான்? என போலீசார் குழப்படைந்தனர். Villupuram murder case

தொடர்ந்து அந்த ஏரியா செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமராக்களை எல்லாம் அலசி ஆராய்ந்தனர். இந்த தேடுதல் வேட்டைக்கு மத்தியில் காணாமல் போன அந்த சிறுவன் அவனாகவே வீட்டுக்கு வந்துவிட்டான். Villupuram murder case

இதையடுத்து சிறுவனிடன் எங்கே போன? வண்டி எங்கே? என்று போலீசார் விசாரித்தனர்.

Villupuram murder case
பாபு, ரோகித்

அப்போது அச்சிறுவன், “வண்டியை விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு (எ)தக்‌ஷினாமூர்த்தியும், ரோகித்தும் எடுத்துட்டு போனாங்க” என்று சொல்லியிருக்கிறான்.

அவனிடம் போலீசார் நேற்று மதியம் 2 மணிக்கு வீட்டை வீட்டு சென்று மறுநாள் மதியம் 12 மணிக்கு வந்திருக்கிற… இரவெல்லாம் எங்கிருந்த… என்று கேட்க, “நான் பாபு அண்ணன் கூட போனேன், கண்டமங்கலத்துல(தமிழ்நாடு) எல்லாரும் மது குடிச்சிட்டு இருந்தாங்க… அவங்க கூட உட்கார்ந்து நான் சைடுடிஷ் சாப்பிட்டேன்” என்று கூறியிருக்கிறான். Villupuram murder case

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பாபு, வடக்குபாளையம் பகுதியைச் சேர்ந்த ரோகித்தையும் போலீசார் தேடினர். சம்வவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Villupuram murder case

இதில் ரோகித்திடம் போலீசார் விசாரித்த போது, “ஜூன் 15ஆம் தேதி பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தமிழ்நாடு கண்டமங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட, எங்கள் ஊரைச் (வடக்குப்பாளையம்) சேர்ந்த சுப்பிரமணி, வித்யகரண், தியாகராஜன், பாபு, வண்டியை எடுத்து வந்த சிறுவன் என 6 பேரும் மது குடித்துக்கொண்டிருந்தோம். இதில் சிறுவன் போதையில் தூங்கிவிட்டான்.

இதையடுத்து சுப்பிரமணி, வித்யகரண், தியாகராஜன் மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். தியாகராஜன் தான் காதலிக்கும் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் டார்ச்சர் செய்வதாகவும் அதை அப்பெண் அழுதுகொண்டே சொன்னதாகவும் வருத்தப்பட்டார்.

இதைக் கேட்ட சுப்பிரமணி, அந்த மனோகரனை விட்டுவிடக் கூடாது. இதோட முடித்துவிட வேண்டும். செலவையெல்லாம் தியாகராஜன் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி, இரண்டு கத்தியையும் சிறுவனுடைய வண்டியையும் என்னிடமும் பாபு கையிலும் கொடுத்தார். தியாகராஜனிடம் பணமும் வாங்கி தந்தார்.

இதையடுத்து நானும் பாபுவும் எக்ஸ்எல்-ஐ எடுத்துக்கொண்டு மனோகரனை தேடினோம். அப்போது பெரியபாபு சமுத்திரம் பகுதியில் செல்லிப்பட்டுவைச் சேர்ந்த ஆதி என்கிற ஆதிநாராயணன்(33) குடும்பத்தில் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அந்தசமயத்தில் அங்கு ஓரமாய் நின்று கொண்டிருந்த என்னையும் பாபுவையும் பார்த்து, நீங்கள் யார்? இங்கே ஏன் நிற்கிறீர்கள்? என்று கேட்டார். அப்போது எங்களுக்கும் ஆதிநாராயணனுக்கும் வாய் சண்டை ஏற்பட்டதால், அவர் பாபுவை கன்னத்தில் அறைந்துவிட்டார்.

ஆத்திரத்தில் நானும் பாபுவும் ஆதிநாரயணனை பதிலுக்கு அடித்தோம். இந்த கைதானே எங்களை அடித்தது என்று கூறி ஆதிநாராணயனின் கையை நான் வெட்டிவிட்டேன். தலை கழுத்தில் எல்லாம் வெட்டியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரது உடலை 10 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்று புதரில் போட்டுவிட்டு, கையையும் கத்தியையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டோம்.

திருக்கனூருக்கு சென்று அந்த கையை எங்கே போடுவது என இடம் பார்த்துக்கொண்டிருந்த போதுதான் ஊர்க்காவலர் எங்களை பார்த்துவிட்டார்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Villupuram murder case
எஸ்.பி.சரவணன்

தொடர்ந்து சுப்பிரமணியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை நடந்தது தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் புதுச்சேரி போலீசார் வழக்கை தமிழகத்துக்கு மாற்றுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேசமயம் விழுப்புரம் எஸ்பி சரவணனும் ஆதிநாராயணன் கொலை வழக்கை விசாரிப்பதற்கான பணிகளை முடக்கிவிட்டுள்ளார்.

Villupuram murder case
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share