பள்ளி சிறுமி மீது ஏறிய லாரி… ஆணையர் அருண் முக்கிய உத்தரவு!

By Kavi

|

Published on 19 Jun 2025, 1:01 PM

பள்ளி செல்லும் நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.commissioner Arun orders

சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சௌமியா. இவருக்கு ஒரு மகனும் 10 வயதில் யாமினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். 

ADVERTISEMENT

யாமினி புரசைவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று காலை 8 .15 மணி அளவில் பள்ளி செல்வதற்காக குழந்தை யாமினி தாய் சௌமியாவுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

ADVERTISEMENT

பெரம்பூர் வீனஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவர்களது வாகனத்துக்கு பின்னால் வந்த சென்னை மாநகராட்சி குடிநீர் ஒப்பந்த லாரி ஒன்று சௌமியாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. 

அப்போது குழந்தை யாமினி நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது தண்ணீர் லாரி ஏறியது.

ADVERTISEMENT

இந்த கோர விபத்தில் குழந்தை யாமினி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

லாரி ஓட்டுனரான கார்த்திகேயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்த சூழலில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்லும் பீக் நேரத்தில் கனரக லாரியை அனுமதித்ததற்காக இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செம்பியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து உதவி ஆணையர் சத்தியமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் இன்று (ஜூன் 19) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதில் காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். 

பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். commissioner Arun orders

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel