தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : காவலர் ஆ.ராஜா மரணம்!

Published On:

| By Kavi

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவலர் ஆ.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 

2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

மே 22 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தனர்..

அப்போது கலவரம் ஏற்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். 

ADVERTISEMENT

அப்போது ஒரு காவலர் மஞ்சள் நிற உடையில், போலீஸ் வேன் மீது ஏறி போராட்டக்காரர்களை நோக்கி சுடும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. 

இன்றளவும் அந்த புகைப்படம் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும். 

ADVERTISEMENT

அந்த வேன் மீது  ஏறி துப்பாக்கி சூடு நடத்தியவர் காவலர் ராஜா.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 

அவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share