நெல்லை: அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை!

Published On:

| By Minnambalam

AIADMK leader hacked to death

 

நெல்லை பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். நெல்லை பேட்டை அடுத்த மயிலப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகரான பிச்சை ராஜு, இவருக்கு வயது 52.  இவர் முன்னாள் பேட்டை பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார், இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய டாஸ்மாக் மதுபான கடையில் பார் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில்,  நேற்று (ஜூலை 24) இரவு பிச்சைராஜ் பேட்டை எம் ஜி ஆர் நகர் பாரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் பேட்டை ரயில் நிலையம் வீரபாகு நகர் வழியாக வரும்போது, வீரபாகு நகர் ரயில்வே சுரங்கத்தில் நின்றிருந்த மர்ம நபர்கள் பிச்சை ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த பிச்சைராஜ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

ADVERTISEMENT

இதனை அந்த வழியாக வந்த நபர்கள் பார்த்து பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் பிச்சை ராஜை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிச்சை ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் அனிதா தலைமையிலான போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

நெல்லை மாநகரப் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியும் நடந்து வருகிறது மேலும் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நெல்லை சரவணன்

அடுத்த மூன்று மணி நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: இன்று விசாரணை!

இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்: ராமதாஸ் வேதனை!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share