தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை முதல் தலைநகர் சென்னையின் பல இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஒடிசா நோக்கி காற்றழுத்த தாழ்வு நகரும் என்றும் பின்னர் மெதுவாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 26 ஆம் தேதி வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்: ராமதாஸ் வேதனை!
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: இன்று விசாரணை!