‘தெறி’ திரைப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருப்பதுபோல, படத்தின் சென்ஸாருக்காக படக் குழுவும் காத்திருக்கிறது. சென்ஸாரும் எதிர்பார்த்ததுபோலவே கிடைத்துவிட்டால், அடுத்து ரிலீஸ் தேதிதான்.
ஆனால், அதற்குமுன்பு தெறி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், விஜய் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் கொடுத்திருக்கிறார். அது, தெறி டப் ஸ்டெப் என்ற ஒரு எக்ஸ்ட்ரா பாடல்தான். சிறிய பாடலாக இருந்தாலும், பிஜிஎம்-உடன் சேர்ந்துவரும் இந்தப் பாடல், விஜய் ரசிகர்களுக்கு தனது போனஸ் என்று தெரிவித்திருக்கிறார் ஜி.வி.