ஒடிசா : 24 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு… நவீன் பட்நாயக் ராஜினாமா!

Published On:

| By christopher

ஒடிசாவில் கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்த நவீன் பட்நாயக், தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இன்று (ஜூன் 5) தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்.

நாட்டில் மக்களவை தேர்தலுடன் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற்றன.

இதில் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சியே ஆட்சியை பிடித்தன. ஆனால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த 2000 ஆண்டு முதல் 5 முறை ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து 24 ஆண்டுகள் முதல்வராக வீறுநடை போட்டு வந்த நவீன் பட்நாயக் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று ஆட்சியை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து தனது முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் இன்று ராஜினாமா செய்துள்ளார்.  தனது ராஜினாமா கடித்தத்தை புவனேஸ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாநில ஆளுநர் ரகுபர் தாஸிடம் அவர் அளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்” : சந்திரபாபு நாயுடு பளீச்!

World Environment Day 2024: ஒரே ஒரு பூமியின் சுற்றுச்சூழல் தினம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share