உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவம் என்னவென்றால், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு பற்றி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு தளம். 1974 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தினம், இன்று பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டுபிடிக்க அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம்:
நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தான் பூமியின் உயிரியல் அடிப்படை. இது நமக்குச் சுத்தமான காற்று, தண்ணீர், உணவு மற்றும் பல்வேறு மூலப்பொருட்களை அளிக்கிறது. ஆனால், மனிதனின் நிலையற்ற செயல்களால், சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், எகோ சிஸ்டத்தின் சீர்கேடு மற்றும் அனைத்து உயிரினங்களின் நலனுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் மூலம், நம் பூமியை மீட்டெடுக்க முடியும், மேலும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஒரு நிலையான உலகத்தை உருவாக்க முடியும் என்பதனை விட உருவாக்க வேண்டும்…
“நாம் பூமியை அழிக்க விதிக்கப்பட்ட ஒரு வைரஸைத் தவிர வேறில்லை” என்று ஸ்பானிஷ் எழுத்தாளர் எலோய் மோரேனோ(Eloy Moreno) தனது டியர்ரா(Tierra) நாவலில் எழுதியுள்ளார்.
நமது அலட்சியத்தினால் உருவான பிளாஸ்டிக் குப்பைகள்:
உலகப் பெருங்கடல்களில் ஏற்கனவே 5.25 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. இது பிரிட்டனின் புதிய அறிக்கையின்படி, கடலில் உள்ள பிளாஸ்டிக் அளவு 2025 ஆம் ஆண்டளவில் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும்.
மனிதர்களால் அழிக்கப்பட்ட காடுகள்:
ஒவ்வொரு நாளும் 42 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் 15.3
பில்லியன் ஆகிறது. இதில் பூமியில் உள்ள 46% மரங்களை மனிதர்களாகிய நாம் ஏற்கனவே
அழித்துவிட்டோம்.
காற்றில் கலக்கப்பட்ட மாசுக்கள்:
51% மாசு தொழில்துறை மாசுபாட்டாலும், 27% வாகனங்களாலும், 17% பயிர்களை எரிப்பதாலும்,
5% பிற மூலங்களாலும் ஏற்படுகிறது. காற்று மாசுபாடு ஒவ்வொரு ஆண்டும் 2 மில்லியன்
இந்தியர்களின் மரணங்களுக்குக் காரணமாகிறது.
இந்நிலைத் தொடர்ந்தால் பூமி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற ஒரு கிரகமாக மாறிவிடும்
இதனைக் கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தில்: “நம்மைச் சுற்றி இருக்கும் பூமியை மீட்டெடுப்போம்”
இது நமது எகோ சிஸ்டத்தை(ecosystem) மீட்டெடுக்கும் அவசியத்தை மற்றும் உயிரியல் பரவல் தன்மையைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வறட்சியால், காட்டுத்தீயினால், மாசடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இந்நேரத்தில், நிலையான நடைமுறைகள் அவசியமாகின்றன. இந்த தினம், ஒவ்வொருவரும், சமூகமும், அமைப்பும் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என்பதை உணர்த்துகிறது.
நாம் எப்படிப் பங்கேற்கலாம்?
மரங்களை நடுதல்: காடுகளை மீட்டெடுப்பது மிகவும் செயல்படுத்தக்கூடிய வழிகளில் ஒன்று.
உள்ளூர் மரங்கள் நடும் நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள் அல்லது தங்களது சொந்த முயற்சியால்
தொடங்குங்கள்.
மறுசுழற்சி பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்: பிளாஸ்டிக் பொருட்களை குறைப்பதும் மேலும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்த தீர்வாகும்.
சுத்தமான பிராண்டுகளை ஆதரித்தல்: சுற்றுச்சூழலுக்கு ஏற்றார் போல் பொருட்களை உற்பத்தி
செய்யக்கூடிய நிறுவனங்களின் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்: சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி உங்கள் சமூகத்தில்
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். Workshop, Semionar போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு,
எகோ சிஸ்டத்தின்(ecosystem) முக்கியத்துவத்தைக் கூறுங்கள்.
பசுமையான பழக்கவழக்கங்களை உருவாக்கவும்: பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல், நீரைச் சேமித்தல், மற்றும் மின்சாரத்தை மிச்சப்படுத்துதல் போன்ற சிறிய மாற்றங்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சுத்தம் செய்ய உதவவும்: உங்கள் பகுதியில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேறுங்கள் அல்லது ஏற்பாடு செய்யுங்கள். கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் குப்பைகளை அகற்றுவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.
எதிர்காலத்திற்கான நோக்கம்!
உலக சுற்றுச்சூழல் தினம், சுற்றுச்சூழல் நமக்குக் கொடுத்ததை நாம் திரும்பிக் கொடுக்க
நம் பூமியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகும்.
இந்த முக்கிய நாளை நாம் கொண்டாடும்போது, நிலையான தேர்வுகளை மேற்கொள்ளவும்,
சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் கொள்கைகளை ஊக்குவிக்கவும் உறுதி புரியுங்கள். ஒன்று சேர்ந்து செயல்பட்டால், நம் பூமியை மீட்டெடுத்து அனைத்து உயிரினங்களுக்கும் ஆரோக்கியமான, ஆர்வமுள்ள எதிர்காலத்தை உறுதி செய்யலாம்.
இந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஒரு பசுமையான, ஆரோக்கியமான பூமிக்காகச் செயல்பட
வாருங்கள். ஒவ்வொரு சிறிய நடவடிக்கையும் முக்கியம், மற்றும் ஒன்றிணைந்து செயல்பட்டால்,
நாம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
-கே.ஜெகதீஸ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?- கனிமொழி கேள்வி!
ஆந்திரா : 10 வருட போராட்டம்… காத்திருந்து அறுவடை செய்த பவன் கல்யாண்