|

”தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்” : சந்திரபாபு நாயுடு பளீச்!

“தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன். டெல்லியில் இன்று (ஜூன் 5) நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன்” என்று கூட்டணி குறித்த விவாதங்களுக்கு சந்திரபாபு நாயுடு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஆந்திராவில் 16 மக்களவை தொகுதியையும் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு, தனி பெரும்பான்மை கிடைக்காத பாஜக ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரை இந்தியா கூட்டணியும் தங்கள் பக்கம் கொண்டுவர அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று (ஜூன் 5) காலை செய்தியாளர்களைச் சந்தித்தஅவர் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். அதில், “என் வாழ்க்கையில் பல்வேறு அரசியல் மாற்றங்களை கண்டுள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு தேர்தலை நான் வரலாற்றில் பார்த்ததில்லை. இந்த வெற்றி ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கு தேச கட்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறேன். இன்று டெல்லியில் நடக்கும் என்டிஏ கூட்டணியின் கூட்டத்துக்கு செல்கிறேன். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமாக இருந்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். ஜனசேனா தலைவர் பவன் கல்யாணுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு எனது நன்றிகள்.

ஜெகனின் 5 ஆண்டுகால ஆட்சி 30 ஆண்டுக்கான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்துக்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நாங்கள் எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி” என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தக் லைஃப் டீமுக்கு சிம்பு கொடுத்த பிரியாணி பார்ட்டி!

அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?- கனிமொழி கேள்வி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts