VIDEO: திரிஷா தந்த நெருக்கடி? திமுகவுக்கு ஹேப்பி ஏன்? உதயநிதி கைது குறித்து ‘தராசு’ ஷ்யாம் ஓபன் டாக்!

Published On:

| By Minnambalam Desk

'Tharasu' Shyam Open Talk on Udhayanidhi’s Arrest

திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையின் பின்னணியில் உள்ள அரசியல், கடந்த கால தமிழ்நாட்டின் கைது நடவடிக்கைகள், உதயநிதி மீதான நடவடிக்கையால் ஏற்படும் எதிர்விளைவுகள் ஆகியவை குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு தராசு ஷ்யாம் அளித்த நேர்காணல்:

கேள்வி: தமிழ்நாட்டில் தற்போது நடக்கக்கூடிய சூழல் மற்றும் பரபரப்பான செய்திகள், கைதும் அடுத்தடுத்து நடந்துக்கிட்டு இருக்கு. குறிப்பா இன்று உதயநிதி கைது செய்யப்பட்டிருக்கின்றார். எதிர்கட்சித் தலைவர், நாளைக்கு பட்ஜெட்… இந்த கைது நடவடிக்கை எப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்கும்?

ADVERTISEMENT

மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்: உதயநிதி அவர்களின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு கொஞ்சம் இது புகழைத்தான் சேர்க்கும். அதாவது, இதில் பேசினது இப்ப ரெண்டு விதமா பாருங்கள்; அவர் வந்து தஞ்சாவூர்ல காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமா பேசுறாரு, தொடர்ந்து பேசிகிட்டே வராரு, நடுவுல கிரவுட்ல இருந்து சில கமெண்ட் வருது. அதை எந்த ஒரு தலைவரும் கண்ட்ரோல் பண்ண முடியாது. கமெண்ட் வரும்போது அதை அவர் பாஸ் பண்ணி போறாரு. பாஸ் பண்ணி போகும்போது அவர் சொன்னது வந்து அவதூறு, பெண்களுக்கு எதிராக பேசப்பட்டது.

இதுல இன்டென்ட் வேணுங்க. அவதூறு சட்டத்தோட முக்கியமான விஷயமே இன்டென்ட்தான்… கிரிமினல் இன்டென்ட். புகழை குலைக்க வேண்டும், கௌரவத்தை குலைக்க வேண்டும், ஆபாசமாக பேச வேண்டும் என்ற இன்டென்ஷனோட பேசணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

ADVERTISEMENT

அதனாலதான் நீதியரசர் என்ன இதுக்கான ரிலீப் கொடுத்தாருன்னா, “நீங்க கைது பண்ணாதீங்க, லஞ்ச் மோஷன்ல விசாரிச்சிட்டு Anticipatory Bail ஒர்த்தா இல்லையான்னு பார்க்கிறேன்” என்றார்.
ஆன்டிசிபேட்டரி பெயில், ப்ரீ-அரெஸ்ட் பெயில் போடும்போது, அதுக்கான சப்ஸ்டன்ஸ் இருக்கிறதா என்பதை எல்லா நீதிபதிகளும் அதுதான் முதல்ல பார்ப்பார்கள்.

ஒரு மேடைப் பேச்சு சம்பந்தமானது. அதுல வந்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்… இந்த தஞ்சாவூர் ஈஸ்ட்ல போட்டுருக்க செக்ஷன்ஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா ரொம்ப வேடிக்கையா இருக்கு பாருங்க.

ADVERTISEMENT

தஞ்சாவூர் ஈஸ்ட் பிஎஸ் செக்ஷன், கிரைம் நம்பர் 287, 196, 192, 352, 79, 296 பி, 61, 351, பி.என்.எஸ்… தமிழ்நாடு பிரிவன்ஷன் ஆஃப் ஹராஸ்மெண்ட் ஆஃப் விமன் ஆக்ட் (பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்), அப்புறம் ஐடி ஆக்ட் செக்ஷன் 67.. இவ்வளவு கடுமையான சட்டப்பிரிவுகள் வந்து பிரயோகம் பண்ற அளவுக்கு ஒரு அரசியல் தலைவரோட மேடைப் பேச்சு எப்படி பொருத்தமானதாக இருக்கும்?

கேள்வி: ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளா?

ஷ்யாம்: ஆமாம்.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள்தான். பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்துல காவல்நிலைய ஜாமீன் கிடையாது. நீதித்துறை ஜாமீன் எல்லாத்துக்குமே உண்டு . டைம் ஆகும்..

சென்னையில் கைது பண்ணி தஞ்சாவூருக்கு கொண்டு போகணும்ங்கிறதுதான் நோக்கமாத் தெரிகிறது; அதாவது அலைக்கழித்தல். இன்னும் என்னென்ன எஃப்.ஐ.ஆர் என்னென்ன ஸ்டேஷன்ல போட்டு வச்சிருக்காங்கன்னு நமக்குத் தெரியாது, சோ பல ஸ்டேஷனுக்கு கூட்டுப் போகலாம்ங்கிற நோக்கம் தெரியுது.

ஜெயலலிதா, கலைஞர் கைதுகளும் எதிர் விளைவுகளும்

இந்த கைது நடவடிக்கை அரசியல் ரீதியாக ஒரு அரசியல் தலைவருக்கு என்ன மாதிரியான வலு சேர்க்கும்? அப்படிங்கிறதை அனுபவத்தை வச்சே பார்க்கலாம். என்னோட அனுபவத்துல 96 ஜெயலலிதா அரெஸ்ட் (கலைஞர் ஆட்சிக்காலம்). அவங்க ஆன்டிசிபேட்டரி பெயில் வாங்கப் போறது இல்லைன்னு சொல்லிட்டாங்க, கைதானாங்க. அதுவரைக்கும் தேர்தல் தோல்வி அடைஞ்சிருந்தாங்க. ஆனா கைதுக்கு பிறகு அதிமுகவை அந்த கைது வலிமைப்படுத்தியதுங்கிறதுதான் உண்மை.

1998-ல் பெரிய அளவுக்கு பாராளுமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது.

2001 கலைஞர் அரெஸ்ட் உங்களுக்கு நினைவு இருக்கும்னு நினைக்கிறேன். அப்போ ஜெயா டிவியில் நான் நிகழ்ச்சி எல்லாம் செய்து கொண்டிருந்தேன். இப்ப நாங்க குடியிருக்கிற டவர் பிளாக்குக்குதான் கலைஞரை கொண்டு வந்தாங்க..

பெரிய அளவுக்கு செஷன்ஸ் ஜட்ஜ் அசோக் குமார் கண்டனம் தெரிவிச்சிட்டாரு. கோர்ட்டுக்கே போகலை.. நைட்டோட நைட்டா கைது பண்ணிட்டாங்க.. உங்க இதயம் சதையால் ஆனதா? சகதியால்? ஆனதான்னு கேட்டார்..

கடைசியில் என்ன ஆச்சுன்னா திமுக வலிமை பெற்றது. 1996, 2001-க்கு பிறகு இப்ப 2026..

ஸ்டாலின் யாரையுமே கைது செய்யாதது ஏன்?

நடுவுல பார்த்தீங்கன்னா ஸ்டாலின் ஆட்சியில சொத்துக்குவிப்பு வழக்கில் கூட கைது நடவடிக்கை பண்றதே இல்லை; ஏன்னா அது எதிர்மறை விளைவை ஏற்படுத்துதுங்கிறது இப்ப உணர்ந்தாச்சு. ஒரு 30 வருஷத்துல எல்லா அரசியல் தலைவர்களுக்கும் அனுபவம் வந்திருச்சு.

திரிஷாவா முதல் புகார்தாரர்?

விஜய்- திரிஷா ரெண்டு பேரையும் சேர்த்து கிரிமினல் இண்டென்ட், உதயநிதி பேச்சுல வராது. முதலமைச்சரை அவமானப்படுத்துறாங்கன்னு செக்‌ஷன் போடலை.. பெண்களை இழிவுபடுத்துறாங்க, வன்கொடுமைன்னுதான் செக்‌ஷன்ஸ் போட்டிருக்காங்க..

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம்னா பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கனுமா வேண்டாமா? இதானே கேள்வி. உங்களுக்கு எதிரா நான் பேசினா யாருங்க முதல் புகார்தாரர்?

விஜய் பேசுனதும் தப்பு.. உதயநிதி பேசுனம் தப்புதான்

கேள்வி: பொது மேடையில் ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர் பெண்களைப் பற்றிப் பேசுவது நாகரிகமா? இதற்கு எப்படி ஜஸ்டிபிகேஷன் கொடுக்க முடியும்?

ஷ்யாம்: ஜஸ்டிபிகேஷன் கொடுக்க முடியாதுங்க. தொண்டர்கள் அப்படியான குரல் எழுப்பியதை உதயநிதி அவர்கள் கண்டிச்சிருக்கலாம், அதில் எனக்கும் உடன்பாடு இருக்கு. அவர் கண்டனம் தெரிவிக்கணும், “அப்படி பேசாதீங்கப்பா அது தப்பு”ன்னு சொல்லணும்.

இப்ப தற்குறின்னு பேசுறதை நான் எல்லாம் பெரிய அளவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவங்க நமக்கு கீழே இருக்கிற 2 தலைமுறைதான்.. அவங்களை தற்குறின்னு பிராண்ட் பண்றது எல்லாம் தப்பு. அர்த்தமே இல்லை.

அப்ப உதயநிதி மீது குற்றச்சாட்டு எங்கே வைக்கலாம்னா அரசியல் மேடையிலதான் வைக்கலாம்.

ஆனால், இங்கே புகார் வாங்கினது தவெகவை சேர்ந்த யாரோ ஒருத்தர்ட்ட இருந்து புகார் வாங்கி தஞ்சாவூர் ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்ல பதிவு பண்ணிருக்காங்கங்கும்போது, அரசியல் நோக்கம் இதுல இயல்பா வந்துருது. உதயநிதியை சப்போர்ட் பண்ணி சொல்லல, அவர் வருத்தம் தெரிவிச்சிருக்கலாம், அதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர் நேரடியா அப்படி பேசல, இவங்க பேசுனத அப்படியே ஒரு ஆமோதிப்பு கமெண்ட் மாதிரி அதுல போயிடுறாரு.

அதே மாதிரி இப்ப விஜய் அவர்கள் நீங்கள் குறிப்பிட்டீங்க இல்லைங்களா, “என் வாயில வந்துருது” அப்புறம் வந்து டேஷ்… அதுவும் தப்புதான், அதுவும் தப்புதான்.

திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியே வரனும்- நயினார் பேச்சு

இதவிட நயினார் நாகேந்திரன் பேசியதை திரிஷா வீட்டிலிருந்து விஜய் வெளியில வரணும்னு பேசினார் என்று ஞாபகம் இருக்கிறதே..

பிப்ரவரி மாதம் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி அப்போ வந்து அவங்களே கண்டனம் தெரிவிச்சாங்கன்னு நினைக்கிறேன். திரிஷா மேடமே கண்டனம் தெரிவித்தார்கள், வருத்தம் தெரிவித்தனர். அப்புறம் இவர் அப்படியே பைபாஸ் பண்ணி போனாரு. இந்த மேட்டர்ல முதல்ல வந்தது பிஜேபிட்ட இருந்துதான் கண்டனம் வந்துச்சு. அவங்க நைனார் பேசுனதே அவங்க மறந்துட்டாங்க போல இருக்கு, தமிழிசை வந்து கண்டனம் தெரிவிச்சாங்க. அதுக்கு பிறகு பிஜேபில இருந்து கண்டனம் வந்த பிறகு தவெகவே அதுக்கு பிறகுதான் முழிச்சுக்கிட்ட மாதிரி எனக்குத் தெரிஞ்சது. நான் நேத்துல இருந்து இத ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன், முதல் யார்ட்ட இருந்து இது கண்டனம் வரப்போகுதுன்னு. ஏன்னா அந்த தொகுப்பை பார்க்கும்போதே இதுல ஏதோ பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சு போச்சு.

ஏன் ஜெயலலிதா பேசலையா?

ஆனா அரசியல் மேடைகளில் ஜெயலலிதா மேமும் அப்படித்தான் பேசியிருக்கிறார்.. நிறைய பேசி இருக்காங்க. கனிமொழி அவர்களைப் பற்றி எல்லாம் பேசி இருக்காங்க. நிறைய பேரு சாதாரண மேடை பேச்சாளர்கள் வெற்றி கொண்டான் இவங்க எல்லாம் வந்து, “பெண்கள் எல்லாம் வெளியில போயிருங்க ராத்திரி 10 மணிக்கு மேல” அப்படின்னு சொல்லிட்டு பேச ஆரம்பிப்பாரு அவரு. இப்ப தவெக சார்பாக போராட்டம் அறிவிச்சிருக்காங்க, அது கரெக்ட். ஏன்னா அந்த ஹீட்டை மெயின்டயன் பண்ணிக்கிடலாம் – திமுக வெர்சஸ் தவெக. உதயநிதி கூட்டத்துல இப்படி நடந்து போச்சு, ரசாபாசமா நடந்து போச்சு.

திரிஷா அழுத்தம் கொடுத்தது தெரியுதே..

இப்ப இதுல என்னான்னா திரிஷாவை பத்தி சொன்னா தவெகவுக்கு கோபம் வராதான்னு ஒரு சித்திரம் வராதா? திரிஷா தரப்புல இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறதுங்க அப்படிங்கிற ஒரு சித்திரம் வருது. அப்ப சமூக ஊடகங்கள் ரெண்டு அணியில நின்று சண்டை போடுறாங்க.. சாதாரண ஜனங்களுக்கு ஒரு ஸ்டேஜில் எது சரி? எது தவறு?ன்னு தெரியாமலே போயிரும்.

பாவப்பட்ட போலீசார்..

ஆனால் கைது நடவடிக்கைக்காக கோர்ட்டுக்கு போயிருச்சு.. பர்ஸ்ட் கம்ப்ளைன்ட் ரிசீவ் பண்ண டைம். அந்த டைம்க்கு பிறகு தஞ்சாவூர் போலீஸ் எப்ப அதை எடுத்துக்கிட்டு சென்னையை நோக்கி டிராவல் பண்ணாங்க? சென்னைக்கு எப்ப வந்து சேர்ந்தாங்க? இதெல்லாம் பேச்சுல வரும். இப்ப நான் ஒரு வழக்கறிஞரா உதயநிதி தரப்புல ஆர்கியூ பண்ணேன்னா இதெல்லாம் எடுத்துருவேன். அப்போ யாரு யாரை அரெஸ்ட் பண்ணாங்களோ அவங்களுக்கு இன்டென்ஷன் இருக்குன்னு ஆயிடும்.

இதுல பாவப்பட்ட போலீஸ்காரங்க என்னன்னா, அரசாங்கம் பிரஷர் கொடுக்கும் அல்லது த்ரிஷா தரப்பில இருந்து பிரஷர்னு நம்ம ஒத்துக்கிட்டோம்னா மீண்டும் முதலமைச்சர் தரப்பில இருந்து அந்த பிரஷர் வரணும். அப்போ நாளைக்கு கோர்ட் யாரைக் கண்டிக்கப் போகுது? இன்றைக்கு யாரைக் கண்டிக்கப் போறாரு நீதிபதி இளந்திரையன்?

நான் உத்தரவு போட்டுருக்கேன், 12 மணி வரைக்கும் நோ அரெஸ்ட்னு உத்தரவு போட்டுருக்கேன், கொயர்சிவ் மெஷர் கூடாதுன்னு சொல்லியிருக்கேன், நீங்க எப்படி கைது பண்ணலாம்?” அப்படின்னா நோக்கம் எப்படி மாறும்? ஆன்டிசிபேட்டரி பெயில் வாங்கிடக் கூடாதுன்னு கைது பண்ணி இருக்காங்கன்னு ஆயிடும்.

நம்ம முன்ஜாமீன் போட்டுருக்கோம். முன்ஜாமீன் போட்ட பிறகு கோர்ட்டும் எடுத்துருச்சு; அதை எடுக்கலன்னா பரவாயில்லை, கோர்ட்டும் எடுத்துருச்சு. எடுத்து வந்து ஓரலா ஒரு உத்தரவு போட்டுருக்காரு நீதியரசர். அப்போ வந்து நீங்க கைது பண்ண முடியாது.

அன்று ஜெ.காலத்தில் நடந்த சு.சுவாமி கைது முயற்சி

இதுக்கு இன்னொரு உதாரணம். 95 காலகட்டத்துல டாக்டர் சுப்பிரமணிய சாமி மிகக் கடுமையாக ஜெயலலிதா மேம்க்கு எதிராக பேசுவார், தமிழ்நாடு பூராம் பேசுவார். சென்னா ரெட்டி கவர்னர், அவர் ஆன்டி-ஜெலலிதா; நாங்கள் எல்லாருமே சென்னா ரெட்டி குரூப். அங்க ராஜ்பவனில் இருந்து இந்த எதிர்க்கட்சி பாலிடிக்ஸ் பண்ணிட்டே கிடப்பாங்க, ராஜ்பவன் ஒரு அடைக்கல பூமி மாதிரி. அப்ப என்ன ஆச்சு அப்படின்னா, சுப்பிரமணிய சாமி இதே மாதிரி ஏதோ ஒன்னு பேசிட்டாரு. அப்போ சென்னை போலீஸ் கமிஷனர் ராஜகோபாலன், சிட்டி போலீஸ் ரொம்ப நல்ல நேர்மையான ஆபீசர், சிபிஐ-ல இருந்து வந்தவர், 96 பிகினிங்னு நினைக்கிறேன். மேம் கோபப்பட்டாங்க, “சுப்பிரமணியசாமிஐ கைது பண்ணியே ஆகணும், நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது” அப்படின்னாங்க. பெரிய போலீஸ் படையோட ஹைகோர்ட்டுக்குள்ள நிக்கிறாரு ராஜகோபாலன் அவர்கள். சாமி ஏற்கனவே ஹைகோர்ட்டுக்கு வேற ஒரு மேட்டருக்கு வந்திருக்காரு, ஆர்கியூ பண்ணிட்டு இருக்காரு, அவர் செல்ப் ஆர்கியூ பண்ணுவாரு (பார்ட்டி இன் பர்சன்).

ராஜ்பவனுக்கு சொன்ன உடனே கவர்னர் கூப்பிட்டு சொன்னாரு, “இது எப்படியாவது நீங்கள் அவருக்கு பாஸ் பண்ணுங்க, இந்த மாதிரி போலீஸ் படை வெளியில இருக்கு” அப்படின்னு சொன்ன உடனே, எனக்கு வக்கீல் நண்பர்கள் இருக்காங்க இல்லைங்களா, அவங்களுக்கு தகவல் கொடுத்துவிட்ட உடனே அவங்க ஒரு சீட்ல எழுதி சாமிக்கு கொடுத்தாங்க. “இந்த மாதிரி உங்களை அரெஸ்ட் பண்றதுக்கு வெளியில போலீஸ் படை நிக்குது”ன்ன உடனே, டக்குனு சாமி எழுந்து ஜட்ஜ் கிட்டயே அதை ரெப்ரசென்ட் பண்ணிட்டாரு. அவர் வேற மேட்டர்ல ஆர்கியூ பண்ணிட்டு இருக்காரு, அது ஷெடியூல்டு ஆர்கியுமென்ட்.

ஜட்ஜ் கிட்ட ரெப்ரசென்ட் பண்ண உடனே ஜட்ஜ், “இது ஃபுல்லா விசாரிக்கிற வரைக்கும் நோ அரெஸ்ட்”ன்னு சொல்லிட்டாரு.

ராஜகோபாலன் ரொம்ப நேர்மையான ஆபீசர், அவங்க மிஸ்சஸ் எல்லாம் பெரிய டாக்டர், பெரிய ஃபேமிலி, டெல்லியில் பெரிய சர்வீஸ் போட்டவர். அவர் வந்து ஜட்ஜ் சொன்ன பிறகு நம்ம பண்ணக்கூடாதுன்னு சொல்லி, போலீஸ் படையோட அப்படியே வாபஸ் ஆயிட்டாரு. கடைசியில் சாமி வந்துட்டாரு, வந்து அவரை நாங்க ஏர்போர்ட்ல அனுப்பிவிட்டோம். அதுக்கு பிறகு அவர் திருப்பி ரெண்டு நாள் கழிச்சு, அப்பதான் தலைக்கு டை அடிச்சாரு. முதல்ல அவரு வெள்ளை முடியோடதான் வருவாரு, தலைக்கு டை அடிச்சிட்டு “நான் மாறுவேஷத்தில் வந்திருக்கிறேன்”னு சொல்லிட்டாரு. மறக்க முடியாத நிகழ்ச்சி இது! ஜெயலலிதா மேம்க்கு யார் மேல கோபம் வந்துச்சு தெரியுமா? ராஜகோபாலன் சார் பேர்ல கோபம் வந்துருச்சு. “என்னங்க, நான் கைது பண்ணுங்கன்னு சொல்றேன், நீங்க இதை கூட பண்ண முடியல”ன்னு சொல்லி கம்ப்ளீட்டா அவரை மாத்திவிட்டாங்க, பாவம்! அவர் ரொம்ப மனதளவுல நொடிந்துட்டாரு.

இது மாதிரிதான் இதுல ஆகும். ஏன்னா கோர்ட்டோட கோபம் யார் மேல வரும் அப்படின்னா, அரசாங்க உத்தரவை செயல்படுத்திய அல்லது அரசாங்கத்தோட பிரஷருக்காக வேற வழி இல்லாமல் செயல்பட்ட தஞ்சை ஈஸ்ட் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்த யாரோ இரண்டு, மூன்று ஆபீசர்ஸ்… யாருன்னு எனக்கு பேர் தெரியாது, அவங்க இதுல பாதிக்கப்படுவாங்க.

உதயநிதிக்கும் நல்லதுதான்.. திமுகவுக்கும் மகிழ்ச்சிதான்

இதில் திமுக அரசியலா எடுத்துப்போம், அவர்களுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். உதயநிதி அவர்களுக்குமே இது நல்லதுதான் நான் நினைக்கிறேன். உதயநிதி எங்க இடத்துக்கு வரும்போதும் அவங்க ஒரு யங்கா, எனர்ஜிட்டிக்கா… ஆனா அதே நேரத்துல அரசியல் ரீதியாக இந்த மாதிரி ஹார்ட்ஷிப் எல்லாம் பார்க்காதவராதான், நான் அப்படிதான் உணர்ந்தேன். ரொம்ப ஃப்ரீயா பேசிட்டு இருந்தோம், பொலிட்டிகலா இல்லாம ஜெனரலா பேசிட்டு இருந்தோம். அப்போ அரசியல் ரீதியாக சில சோதனைகள் வந்தால் தான் தலைவர்கள் வந்து புடம் போட்டவர்களாக மாறுவாங்க.

அன்று முதுமையிலும் போராடிய கலைஞர்

கலைஞர் அரெஸ்ட் சொன்னேன் இல்லைங்களா, அப்ப ஸ்டாலின் அரெஸ்ட்… அதுல வந்து கலைஞர் வந்து அவ்வளவு வயசுலங்க, அவரு தர்ணா பண்ணாருங்க, சென்ட்ரல் ஜெயில் முன்னாடி உட்கார்ந்தாரு. அதெல்லாம் என்ன செய்ய முடியும், முன்னாள் முதலமைச்சர் அவ்வளவு சீனியர் லீடர்!

உதயநிதிக்கு உரம் சேர்க்கும்

அப்போ இது எல்லாமே அரசியல் தலைவர்களுக்கு வந்து உரம் சேர்க்கும். வாட் எவர் இட் இஸ், உதயநிதி மேல வைக்கிற சார்ஜ் என்ன? இதெல்லாம் அரண்மனை அரசியல், மன்னர் பரம்பரை, தந்தையார் வந்து ஸ்டாலின் அப்படிங்கறதுனாலதான் இவருக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைச்சது, இதுதானே வைக்கப்பட்ட விமர்சனங்கள்?

இப்ப வந்து அவரே அதை ஹேண்டில் பண்றாரு இல்ல, இது வந்து அவருக்கு ஒரு வகையில அரசியல் ரீதியாக உரம் சேர்க்கும்ங்கிறது என்னோட தனிப்பட்ட பார்வை. இத்தனை வருஷமா நான் இதை பார்த்த வகையில தலைவர்களுக்கு இது சரிதான், இத பத்தி ஒன்னும் தவறு கிடையாது.

விஜய் மீது கோபப்படப் போகும் விவசாயிகள்

அவருக்கு ஒரு எள்ளல் தொனி இருக்கு, அது வேற விஷயம். அது கிரிமினல் இன்டென்டா எப்படி மாறும்? கோர்ட்ல அப்படி வராது இல்லைங்களா. சரி, எந்த போராட்டத்தில இப்படியான ஒரு அட்டர்னன்ஸ் வந்தது? காவிரி நீர் போராட்டத்தில! அப்ப வந்து தஞ்சாவூர்ல டெல்டால இருக்கிற விவசாயிகள் என்ன நினைப்பாங்க? இப்படி எல்லாமா நுணுக்கி பாப்பாங்க?

நீங்களும் நானும் பேசலாம், “என்னங்க, ஒரு காவிரி நீர் வரல, காஞ்சு போய் கிடக்கிறோம், இவ்வளவு காஞ்சு போன நேரத்துல முதலமைச்சர் கண்ணாடி தொழிற்சாலையைப் போய் பார்த்துட்டு இருக்காரு, ஏதோ உதயநிதி பேசிட்டாரா அதுக்கு போய் இப்படி எல்லாம் பண்றாங்க” அப்படின்னு நினைக்க மாட்டாங்களா?

நினைப்பாங்களா, நினைக்க மாட்டாங்களா… அதாவது நீங்கள் எப்படி பேசினாலும் கைது நடவடிக்கைக்கு பின்னாடி இன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் மறந்துருவாங்க. ஒரு நாலு நாள் கழிச்சு, மூணு நாள் கழிச்சு உதயநிதி மாதிரியான ஒரு இளைய தலைவர், அவரோட அரசியல் வாழ்க்கையில அவருக்கு இது வலிமை சேர்க்கும். இதான் என் கருத்து.

சிலேடைப் பேச்சு பொதுவானதுதானே

இரண்டாவது, இப்படியான பேச்சு… சிலேடைப் பேச்சு… காமனா வந்து சாதாரண மக்கள் மத்தியில இந்த சிலேடைப் பேச்சு ரொம்ப சர்வ சகஜம் இல்லைங்களா? நம்ம என்னன்னு சொல்றோம்? உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர், டெப்டி சிஎம்மா இருந்தவரு, அவரு மேடையில பேசிட்டு இருக்கும்போது யாரோ வந்து குரல் கொடுக்கிறாங்கன்னா அவர் கண்டிச்சிருக்க வேண்டாமா? இது வேறங்க, இது நாகரிக பாடம்.

நாகரிக பாடம் யாருக்கு எல்லாம் எடுக்கனும்?

இந்த நாகரிக பாடம் எல்லாத்துக்கும் எடுக்க வேண்டியது வரும்; நைனாருக்கும் எடுக்க வேண்டியது வரும், விஜய்க்கும் எடுக்க வேண்டியது வரும், தவெகவை சேர்ந்த எத்தனையோ அமைச்சர்கள் இப்படி பேசுவாங்க, திமுக சேர்ந்தவங்களும் பேசுவாங்க, அதிமுக சேர்ந்தவங்களும் பேசுவாங்க. இது நாகரிக பாடம்ங்கிறது வேறங்க, அது தனிமனித பாடம்.

ஆனா பெண்கள், பெண்களுக்கு இழைக்கப்படுற அநீதிகள் சம்பந்தமான ஒரு சட்டம்… சட்டம் கடுமையான சட்டம். அந்த சட்டப் பிரிவுகளை உள்ள கொண்டு வந்து சேர்க்கும் போது, என்ன அநீதி நடந்ததுங்கிற கேள்வியே வராதா? சரி, அநீதிக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒரு புகார் தர வேண்டாமா?

ஒரு குருவி பருந்தாகிவிட்டது..

உதயநிதி தயாரிச்ச முதல் படம் அவருக்கு குருவிங்க… அதாவது விஜய்யை வெச்சு எடுத்த முதல் படம்.. அவர் சினிமா வாழ்க்கையில முதல் படமே அதுதான், குருவி. அவரும் சினிமாக்காரர்தான். ஒரு குருவி பருந்தாகிறது, அப்படி வேணா எடுத்துக்கிடலாம்; பருந்தாகி விட்டதுன்னு வேணா எடுத்துக்கங்க. இவ்வாறு தராசு ஷ்யாம் தெரிவித்தார்.

வீடியோ:

Tharasu Shyam Interview | விஜய்க்கு அழுத்தம் கொடுப்பது யார்? | Udhayanidhi Stalin | CM Vijay | DMK
Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share