ADVERTISEMENT

GOAT பர்ஸ்ட் ‘சிங்கிள்’ மற்றும் ‘ரிலீஸ்’ தேதி இதுதான்!

Published On:

| By Manjula

‘GOAT’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, பார்வதி, யோகிபாபு, சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ADVERTISEMENT

அந்த வகையில் தளபதி விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும், தீபாவளியன்று படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவலை நடிகர் வைபவ் தெரிவித்திருக்கிறார்.

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் முதலில் பக்ரீத் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்பட்ட ‘GOAT’ தற்போது தீபாவளிக்கு தள்ளிப்போய் இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய 69-வது படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

ADVERTISEMENT

டோலிவுட்டின் டிவிவி நிறுவனம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்தினை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அண்ணா, கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸின் ‘SK 23’ கதை இதுதான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share