அதிமுக வேட்பாளர் வாக்குவாதம்: நிறுத்தப்பட்ட தபால் ஓட்டு மறு எண்ணிக்கை!

Published On:

| By christopher

அதிமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட  தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவின்படி இன்று (ஜூலை 12) காலை 10 மணிக்கு தென்காசி தொகுதியில் ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் முன்னிலையில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை தொடங்கியது.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கோட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே வாக்காளர்களின் தகவல்கள் அடங்கிய படிவம் 13ஏ, 13பி ஆகியவற்றை பரிசீலித்து சரிபார்த்த பிறகே படிவம் 13 சி எனப்படும் ஓட்டுசீட்டுகளை எண்ண வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,  தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அதிமுக வேட்பாளரின் கோரிக்கையை ஏற்றதாக அறிவித்தார்.

மேலும் வேட்பாளர்களிடம் 13 சி ஆவணத்தை காட்டியதுடன் நீதிமன்றத்தின் உத்தரவையும் படித்து காட்டிய நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

தென்காசியில் தபால் ஓட்டு மறு எண்ணிக்கை தொடங்கியது!

மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை! 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share