தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை எச்சரிக்கை!

Published On:

| By Kavi

தமிழகத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 41.9  டிகிரி செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக  கொடைக்கானலில்  10.9° செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 22) வெளியிட்ட அறிவிப்பில்,  “22-04-2026 மற்றும் 28-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

22-04-2026 முதல் 26-04-2026 வரை: உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share