ஆசிரியர் தகுதித் தேர்வு TET விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்- இதுவரை விண்ணப்பித்த 4 லட்சம் பேர்

Published On:

| By Mathi

TET Exam 2025

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (TET) நடத்துகிறது. நடப்பாண்டுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நவம்பர் 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும்.

TET தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தவர்கள் B.Ed, பட்டப் படிப்பு படித்தவர்கள் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள், இந்த ஆண்டு TET தேர்வு எழுதுவதற்காக ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு கடைசி நாள் செப்டம்பர் 8-ந் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளை ஏற்று இன்று செப்டம்பர் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

TET தேர்வு எழுதுவோர் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இந்த தேர்வுக்கு நேற்று செப்டம்பர் 9-ந் தேதி வரை சுமார் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share