தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் மருத்துவ இயக்குனரகம் தகவல்படி, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 16, 334 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேரு உயிரிழந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டின் இதே ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 15, 688 பாதிப்புகளும் 13 மரணங்களும் பதிவாகி இருந்தன.
இந்த சூழலில் வரும் மாதங்களில் டெங்கு பரவல், மேலும் அதிகரிக்க கூடும் என சுகாதாரத் தறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஏடிஎஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழல் உருவாகக்கூடும் என்பதால், தொடர்ச்சியான கண்காணிப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முக்கியமானது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.
மாநிலத்தின் சமீபத்திய புள்ளி விவரங்கள் டெல்லி பரவல் தொடர்வதையே காட்டுகின்றன.
செப்டம்பர் 17ஆம் தேதி மட்டும் 244 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு எண்ணிக்கை 16,578 ஆக அதிகரித்துள்ளது
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறிகளுடன் வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த சூழலில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த பொது மக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
