ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டமியற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்து மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை கொண்டு வந்தது.
ஆனால் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துகின்ற கூட்டமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு இன்று (ஜூலை 19) சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் , “ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மத்திய அரசு சட்டப்படி ஆன்லைன் சூதாட்டம் தடுக்கப்படும். ஆனால், ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று வாதிடப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில், “சிலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மரணம் அடைகிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த விளையாட்டுகளைக் குறை கூற முடியாது” என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசின் பதில் வாதத்திற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மோனிஷா
மோடியாவது EDயாவது?: அட்ரஸை தரேன் ரெய்டுக்கு வாங்க: உதயநிதி பேச்சு!