சாப்பாத்தி என்றாலே அதற்கு என்ன சைடிஷ் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு சத்தான இந்த முள்ளங்கிக்கீரை உருளைக்கிழங்கு சப்பாத்தி செய்து கொடுத்து அசத்தலாம். இதற்கு சைடிஷே தேவைப்படாது.
என்ன தேவை? Radish Spinach Potato Chapati
கோதுமை மாவு – 200 கிராம்
பொடியாக நறுக்கிய முள்ளங்கிக்கீரை – ஒரு கைப்பிடி அளவு
வேகவைத்த உருளைக்கிழங்கு – 4
எண்ணெய், வெண்ணெய் தலா – 2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முள்ளங்கிக்கீரையை எண்ணெயில் வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, கீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம். உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கிலும் தயாரிக்கலாம்.