தமிழக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி இன்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, சந்தீப் ராய் ரத்தோர் (1992) தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் செயல்பட்டு வந்த நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
