ADVERTISEMENT

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று காலை வெளியாகும்.. செல்வப்பெருந்தகை

Published On:

| By Mathi

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று ஏப்ரல் 3-ந் தேதி காலை வெளியாகும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் மூத்த தலைவர் பெருமக்கள் எல்லாம் கலந்து ஆலோசனை செய்திருக்கிறோம்.

ADVERTISEMENT

ஏறக்குறைய 85 விழுக்காடு தொகுதிகளில் வேட்பாளர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். இன்னும் 15 விழுக்காடு இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிவு செய்யப்படும். இன்று (ஏப்.2) இரவோ, நாளை காலையோ வேட்பாளர் பட்டியல் வெளிவரும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share