வேட்பாளர் பட்டியலில் தமிழிசை இல்லாதது ஏன்?

By Balaji

|

Published on 12 Apr 2016, 12:00 AM

தமிழகத்தில் 54 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் பாஜக வெளியிட்டது. ஆனால், இதில் அக்கட்சியின் மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனின் பெயர் இல்லை. இது குறித்து விளக்கமளித்த அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு செயலாளர் ஜே.பி நட்டா, தமிழிசை போட்டியிட 10–க்கும் மேற்பட்ட தொகுதிகளை தொண்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அதிலிருந்து விரைவில் அவருக்கான தொகுதி தேர்வு செய்யப்படும் என்றார்.

கடந்த 2006 தேர்தலில் ராதாபுரம், 2009 மக்களவை தேர்தலில் வட சென்னை 2011 தேர்தலில் சென்னை வேளச்சேரி, ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இந்த முறை இந்த விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி தொகுதியில் போட்டியிடவே அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel