கோடைக்காலத்தில் (Summer Tips) சருமத்தை பாதுகாத்துக்கொள்ள இயற்கைக் குறிப்புகளை பார்க்கலாம்
கோடைக்காலம் தொடங்கியவுடன் சூரியன் சுட்டெரிப்பதால் சருமத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறது. இதனால் சருமம் கருமையாவது ஒரு பொதுவான பிரச்சனையாகவே உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் முக மற்றும் சரும பராமரிப்புக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மக்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த கிரீம்கள் மற்றும் லோஷன்களுக்கு அதிகமாக பணம் செலவு செய்கிறார்கள். ஆனால், அதன் பலன்கள் நீண்ட காலம் நீடிப்பது இல்லை. அதே சமயம் நமது வீட்டு சமையல் அறையில் உள்ள இயற்கையான பொருட்களைக் கொண்டே சருமத்தை பராமரிக்கலாம்.
சருமத்திற்கு அருமருந்தான பால்
காய்ச்சப்படாத பால் நமது சருமத்திற்கு ஒரு இயற்கையான சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம், முகத்தில் உள்ள அசுத்தங்களை ஆழமாகச் சுத்தம் செய்கிறது. சிறிதளவு குளிர்ந்த பாலை (Milk to whiten skin) எடுத்து, அதில் ஒரு பஞ்சு உருண்டையை நனைத்து, முகத்தில் தடவி, மென்மையாகத் துடைக்கவும். சில நாட்களிலேயே சருமத்தில் வித்தியாசம் தென்படுவதை நீங்கள் பார்க்க முடியும்.
கடலை மாவு + தயிர்
கடலை மாவு மற்றும் தயிர் ஆகிய இரண்டும் சருமத்திற்கு மிகவும் நன்மை அளித்து, பொலிவை மேம்படுத்த உதவுகின்றன. இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகத்துடன் (besan + curd face pack) சேர்த்து கைகளிலும் பூசலாம். 5 தேக்கரண்டி கடலை மாவு, 3 தேக்கரண்டி தயிர் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆக்கி, அதை உங்கள் முகத்தில் பூசவும். கழுவிய பின்னர் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
தக்காளி சாறு பேஸ் பேக்
சூரிய ஒளியால் உங்கள் முகம் கருமையாக மாறியிருந்தால் தக்காளி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். தக்காளிச் சாறுடன் (Tomato juice Face pack) சிறிதளவு கடலை மாவு மற்றும் மஞ்சள் தூளைக் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கவும். அதை 15-20 நிமிடங்கள் முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தின் கருமையைக் குறைத்து, உங்கள் சருமத்தைப் பொலிவாக்கும்.
முகத்தை பொலிவாக்கும் தேன்
தேன் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. தேனில் (Honey benifits for skin) உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், முகப்பருக்களைக் குறைக்க உதவுகின்றன. உங்கள் முகத்தில் தேனைப் பத்து நிமிடங்கள் தடவி, பின்னர் கழுவி விடுங்கள். நீங்களே முகத்தில் வித்தியாசம் தென்படுவதை உணர முடியும்.
வெள்ளரிக்காய்
கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் (Benefits of Cucumber) உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. வெள்ளரி துண்டுகளை உங்கள் கண்களின் மீது வைக்கவும் அல்லது அதன் சாற்றை முகத்தில் தடவலாம். இது உங்கள் சருமத்தைக் குளிர்ச்சியடையச் செய்து, படிப்படியாகக் கருவளையங்களை மங்கச் செய்ய உதவுகிறது.நமக்கு எளிமையாக கிடைக்கும் இந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் இயற்கையானவை. ஆனால், அவற்றைத் தவறாமல் தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம். அப்படி செய்தால்தான் கோடையில் நல்ல பலன்களைப் பெற முடியும்.
