சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. Sunrisers Hyderabad won rajasthan
ஐபிஎல் சீசன் தொடர் களைகட்டியுள்ளது. ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஹைதராபாத் அணியில் அபிஷேக் ஷர்மா, ஹெட் ஆகியோர் களமிறங்கி, அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர். அபிஷேக் ஷர்மா 24 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், ஹெட் ஆகியோர் ராஜஸ்தான் பவுலர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் ரன் ரேட் எகிற தொடங்கியது.

தொடர்ந்து இந்த ஜோடியை தகர்க்க முடியாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். தொடர்ந்து ஹெட் 67 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய நிதிஷ் ரெட்டி ( 30 ரன்கள்), காலேசன் ( 34 ரன்கள் ) எடுத்திருந்தனர். இஷான் கிஷன் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 286 என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஜஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.

சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடியதால் அணியை சரிவில் இருந்து மீட்டார். த்ருவ் ஜூரல், ஹெட்மெயர், சுபம் துபே ஆகியோர் அணியை மீட்க கடுமையாக போராடினர். இருப்பினும் அவர்களால் 286 என்ற இமாலய இலக்கை எட்ட முடியவில்லை.
20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. Sunrisers Hyderabad won rajasthan