பீட்சா , பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை… சடலமான பரிதாபம்!

Published On:

| By Kumaresan M

Husband kills wife in broad daylight

மத்திய பிரதேசத்திற்கு கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக சென்று விட்டு திரும்பிய, கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை சென்னையில் உயிரிழந்து போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 15 வயதான எலினா லாரேட் என்ற மாணவி சக பள்ளி வீராங்கனைகளுடன்  பங்கேற்றுள்ளார்.போட்டி முடிந்து கடந்த 15ம் தேதி ரயில் மூலம் தமிழகம் புறப்பட்டுள்ளார். ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி எலினா, உடல் பிரச்னை குறித்து அவர்களிடம் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து , அவர்கள் மாணவியை மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே நேற்று எலினா உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் வரும் போது பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனைவரும் சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது.  அதன்பிறகு, எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணத்திற்கு பீட்சா, பர்கர் தான் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே தெரிய வரும் என்று போலீசார் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

சமீப காலமாக சவர்மா, பர்கர், 10 ரூபாய் குளிர்பானங்கள் குடிப்பவர்கள் திடீர் திடீரென இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. எனவே, நாம் இது போன்ற உணவு பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்தால் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

 அவள், இவள்…. ஜோதிகாவை வறுத்து எடுக்கும் சுசித்ரா

சர்ச்சைப் பேச்சு… ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுத்தாக்கல்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share