கங்குவா படம் வெளியாகி பெரும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதனால், படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, நடிகை ஜோதிகா திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், கங்குவா படம் பற்றியும் அதற்கு வந்த எதிர்மறையான விமர்சனங்களை பற்றியும் கூறியிருந்தார். இந்த நிலையில், சுசித்ரா நடிகை ஜோதிகாவை வெளுத்து வாங்கி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, “கங்குவா ஒரு படமா? ஒரு கங்குவா பிதாமகன் கொடுத்த நடிகரை கெடுத்து விடுமா? முதல் அரை மணி நேரம்தான் சரியில்லை என்று சொல்றாங்க. அப்போது, டிக்கெட் வாங்கிட்டு அரை மணி நேரம் கழிச்சு உள்ளே போனுமா? அப்போ, டிக்கெட் விலைல டிஸ்கவுன்ட் கொடுப்பாங்களா?
Suchitra’s shocking statement on #Jyothika supporting #Suriya‘s #Kanguva. pic.twitter.com/i1JS1gwO8h
— Manobala Vijayabalan (@ManobalaV) November 18, 2024
அதாவது பொண்டாட்டினு சொல்லி என்ன மாதிரியான விஷயங்களை பேசியிருக்கு இந்த பொம்பள? ஜோதிகா படத்தை பற்றி இப்படி பேசியது மேலும் கங்குவா படத்திற்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். அதோடு இது ஒரு வாண வேடிக்கை என ‘spectacle’ என பயன்படுத்தியிருக்கிறார்.
இங்கிலீஷ் தெரிஞ்சா எழுதனும். அல்லது வேறு யாரையாவது வச்சு எழுத சொல்லனும். i am so proud of suryaனு எழுதியிருக்கிறார். மேலும் என்னைக்காவது சினிமாவை தாங்கிப் பிடிக்கனும்னு சூர்யா இதற்கு முன் சொல்லியிருக்கானா? எப்ப பாத்தாலும் சூர்யா ஜோதிகா, சூர்யா ஜோதிகானு சொல்லிட்டு இருக்கீங்க. இவர்கள் என்ன மாற்றான் பிரதர்ஸா?” என்று சுசித்ரா கடுமையாக சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்