வைஃபை ஆன் செய்ததும், “ சிந்தனை செய் மனமே…சிந்தனை செய் மனமே” பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா… இன்னைக்கு ஒரே ”சிந்தனை”யா பாடுறீரு..
எஃப்.எம்.-ல் பாடல் ஓடிகிட்டு இருந்துச்சு.. அந்த எபெக்ட்தான்.. தேர்தல் களத்துல எல்லாரும் ஓடிகிட்டு இருக்கிற நேரத்துல விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திகள் அதிகமா அடிபடுதே கவனிச்சீரா?
ஆமாய்யா.. ஏன் திருமா திடீர்னு அசெம்பிளி எலக்ஷன் போட்டி போடுறாரு?
பொறுய்யா.. சொல்றேன்.. காட்டுமன்னார்கோவில் தொகுதியில தானே போட்டி போட போறேன்னு திருமாவளவன் அறிவிச்சது திமுக கூட்டணியில எல்லா தலைவர்களுக்குமே அதிர்ச்சியாகிடுச்சு.. லோக்சபா எம்.பி,யா இருக்கிற நிலையில திருமா ஏன் சட்டசபைக்கு போட்டியிடுறாருன்னு கேள்வியும் எழுந்துச்சு..
இதை பத்தி திமுக தரப்புல விசாரிச்சப்ப, “ இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட அன்னைக்கு நைட்டே சிஎம் ஸ்டாலின், திருமாவை கூப்பிட்டு பேசினாரு.. நீங்க ஏன் அசெம்பிளி எலக்ஷன்ல நிக்கனும்? லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செஞ்சா பை எலக்ஷன் வேற வருமே? அதுக்கு பேசாம காட்டுமன்னார்கோவில்ல வேற ஒருத்தரை நிற்க வையுங்க”ன்னு சொன்னாரு.. திருமாவும், “யோசிக்கிறேன் அண்ணே”ன்னு சொன்னாரு.” என்றனர்.
இதே மாதிரிதான் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் திருமாவை கூப்பிட்டு பேசுனாங்க.. அவங்க எல்லாத்துக்குமே “நான் யோசிக்கிறேன்”ன்னு பதில் சொல்லி இருந்தாரு திருமா..
இதுக்கு அப்புறமா திங்கள்கிழமை இரவு விசிகவோட உயர்நிலைக் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருமா நடத்துனாரு.. 40 பேரு கலந்துகிட்ட இந்த கூட்டத்துல எலக்ஷன்ல சீட் கிடைக்காத ஆளூர் ஷாநவாஸ், திருப்போரூர் பாலாஜி கலந்துக்கலை.. ஆனா பனையூர் பாபு கலந்துகிட்டாரு..

இந்த கூட்டம் நைட் 9 மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலை 1.30 மணி வரைக்கு நடந்துச்சு..
“காட்டுமன்னார்கோவில் தொகுதியில திருமாவளவன் போட்டியிடலாமா? வேண்டாமா?” அப்படிங்கிறதை முடிவு செய்யதான் இந்த கூட்டமே நடந்துச்சாம்.. இதுல ஒவ்வொருத்தோட கருத்தையும் உன்னிப்பா திருமா கேட்டுகிட்டாரு.. செய்யூர் பாபுவை பேச சொன்னப்ப அவரு எந்த கருத்தும் சொல்லாம இருந்துட்டாரு..
திருமா பேசும் போது, திமுக கூட்டணியில எப்படி எல்லாம் பேச்சுவார்த்தை நடந்துச்சு… தேமுதிகவை எப்படி டீல் செஞ்சாங்க.. நம்மகிட்ட எப்படி பேச்சுவார்த்தை நடத்துனாங்க.. தொகுதிகள் எப்படியெல்லாம் ஒதுக்கப்பட்டுச்சுன்னு ரொம்பவே விரிவாகவும் உருக்கமாகவும் பேசினாரு..
இதெல்லாம் பேசிட்டு, நம்ம கட்சியை வளர்த்தெடுத்து நாம அரசியல் அதிகாரத்தை நோக்கி போகனும்னா மாநில அரசியல்ல நான் முழுவீச்சா இருக்கனும்னு சொல்லி அதுக்கான காரணங்களையும் திருமா விரிவா சொன்னாரு..
இந்த கூட்டத்துல பேசுன, 90 சதவீதத்துக்கும் அதிகமானவங்க காட்டுமன்னார்கோவில்ல திருமா போட்டி போடனும்தான் சொல்லி இருக்காங்க.. அதுக்கு அப்புறம்தான் அசெம்பிளி எலக்ஷன்ல போட்டி போடுறதுல மாற்றம் இல்லைன்னு முடிவுக்கு வந்தாராம் திருமா.. அதோட ஏப்ரல் 6-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யவும் திருமா முடிவு செஞ்சிருக்காரு.. திருமாவோட இந்த முடிவு திமுகவுக்கு வருத்தத்தை தந்துருக்காம்..
ஓஹோ.. திருமா ‘இந்து’ பத்திரிகை கொடுத்த பேட்டியை பத்தி எல்லோருமே சொல்றாங்களே..
நானும் பார்த்தேன்.. விசாரித்தேன்.. சொல்றேன்.. திருமா அந்த பேட்டியில, மத்த மாநிலத்துல செய்யுற மாதிரியே தமிழகத்துலயும் எலக்ஷன் முடிஞ்ச பிறகு எல்லா கட்சியையு உடைக்கிற வேலையை பாஜக செய்யும்.. திமுகவுக்கு மெஜாரிட்டியே கிடைச்சாலும் கூட கட்சியை உடைக்க முயற்சி செய்யும்”னு சொல்லி இருக்காரு.

திருமா இப்படி சொல்ல என்னதான் காரணம்னு அவருக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “ திருமா இப்படி அச்சப்படுறதுக்கும் தமிழக அரசியல்ல தீவிரமா கவனம் செலுத்ததான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில போட்டியிடுறேன்னு சொல்றதுக்கும் பின்னால ஒரு காரணம் இருக்கு..
டெல்லியில, பிரதமர் மோடி அனுப்பியதா சொல்லி அதிகாரி ஒருவர் திருமாவை சந்திச்சு பேசுனார். அவரு முதல்ல பேசும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்துடுங்க.. உங்க சமுதாயத்துக்கு பயன்படுத்திக்கிற மாதிரியான கேபினட் அமைச்சர் பதவி கொடுத்துடலாம்.. “னுதான் ஆரம்பிச்சாரு..
ஆனா திருமாவோ, “அதெப்படிங்க நாங்க உங்க கூட்டணிக்கு வர முடியும்? ஐடியாலஜிக்கலாவே உங்களுக்கு எதிரானவங்க நாங்க.. அதெல்லாம் சரியா வராதுன்னு” நிராகரிச்சுட்டாரு…
ஆனாலும் விடாத அந்த அதிகாரி, விசிகவோட பொருளாதார நிலைமையை பத்தி ரொம்பவே துல்லியமா சொல்லிட்டு, “உங்க கட்சிக்காக எல்லா மாவட்டத்துலயும் கட்சி ஆபீஸ் கட்டுறதுக்கான அத்தனை பண்ட்டும் தர்றோம்.. நீங்க எங்க கூட்டணிக்கு கூட வரவேண்டாம்… திமுக கூட்டணியில இருந்து விலகி முதல்வர் வேட்பாளராக உங்களை முன்னிறுத்தி நில்லுங்க.. மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்”ன்னு சொன்னாரு….
டக்கென்னு கையெடுத்து கும்பிட்ட திருமா, “மதவாத சக்திகளை தமிழ்நாட்டுக்குள்ள நுழையவிடாத தடுக்கிறது திமுகதான்.. அதனால திமுக தலைமையிலான கூட்டணியை விட்டு நாங்க விலக முடியாது.. நீங்க வந்து பேசுனதுக்கு ரொம்ப நன்றிங்க”ன்னு சொல்லி அனுப்பி வைச்சுட்டாரு..
பாஜகவை ரொம்பவே கடுமையா எதிர்த்து பேசுற தான்கிட்டேயே இப்படி பேசுற சக்திகள், தமிழ்நாட்டுல காலூன்றி நிக்கிறதுக்கு எந்த எக்ஸ்ட்ரீமுக்கு போவாங்க அப்படிங்கிறதை தமக்கு ஏற்பட்ட அனுபவத்துல உறுதியா நம்புறாரு திருமா.. அதனால தமிழ்நாட்டு அரசியல்ல தன்னோட ரோல் தீவிரமா இருந்தே ஆகனும்னு முடிவோடதான் இருக்காரு திருமாவளவன்” என்கின்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
