டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் தொடர் கோபம்… டெல்லிக்குப் போகும் பிடிஆர்

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் பிடிஆருக்கு முதல்வர் ஸ்டாலின் பொது மேடையில் அட்வைஸ் செய்த வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. talin’s continued anger… PTR going to Delhi Rajya saba

அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

”தமி­ழ­வேள் பி.டி.ராஜன் ‘வாழ்வே வர­லாறு’ என்ற நூல் வெளி­யீட்டு விழா இன்று (ஏப்ரல் 22) மாலை 6 சென்னை கலை­வா­ணர் அரங்­கத்­தில் நடை­பெற்றது. இந்த விழாவுக்கு தலைமை திமுக தலை­வர், முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யேற்று நூலை வெளி­யிட்டு சிறப்புரையாற்றினார். தனது தாத்தா பி.டி.ராஜன் பற்றிய நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தவர் அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன். Stalin angry with PTR Rajyasaba

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையில் ஒரே ஒரு விஷயம்தான் பெரிதும் பேசப்பட்டது.

ADVERTISEMENT

அதாவது, ‘அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த – வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்கவேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள், அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கழகத் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன்.

என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்’ என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின். அவர் பேசப் பேச மேடையில் இருந்த பிடிஆர் தர்மசங்கடத்தில் நெளிந்தார். Stalin’s continued anger… PTR going to Delhi Rajyasaba

ADVERTISEMENT

பிடிஆரின் தாத்தா பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பிடிஆர் பற்றிய தனது அதிருப்தியை ஏன் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வவளவு வெளிப்படையாக பேசினார் என்றால், அதற்குக் காரணம் சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆரின் ஓப்பன் டாக் தான்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமியின் கேள்விக்கு பதிலளித்த பிடிஆர். ‘ஏற்கனவே அறிவித்த திட்டம் என்ன ஆச்சு என்று கேட்கிறார். காலம் மாற மாற சில சூழ்நிலைகள் நீடிக்கும் சிலது மாறும். நீர்வளத் துறை அமைச்சர் ஒரு முறை என்னிடம் அவையில், ‘இப்ப தியாகுவுக்கு தெரியுதா.. நிதி எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு’னு என்று கேட்டார். நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கையிலே சுமார் 10,000 கோடி அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். நான் நிதியமைச்சராக இருந்தபோதும் அதேபோல் செய்தார். ஆனால், ஐ.டி. துறைக்கு அன்றைக்கும் சுமார் 200 கோடிதான் ஒதுக்கப்பட்டது. இன்றைக்கு சுமார் 130 கோடி- 150 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

என்ன மாறியிருக்கிறது என்றால்… அன்றைக்கு இந்த துறையின் நிதி இந்த துறையால் சரியாக பயன்படுத்தப்பட்டு, துறைக்கு வர வேண்டிய நிதி எல்லாம் சரியான நேரத்தில் வந்து செயல்பாட்டுக்கு எந்த தடையும் இல்லாமல் இருந்தது. Stalin’s continued anger… PTR going to Delhi Rajyasaba

இன்றைக்கு இருக்கிற சூழ்நிலை அரசாங்கத்துக்கு எந்த அளவுக்கு நிதி நிலைமை கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கிறதோ, இந்த துறையினுடைய நிதிநிலை அதோடு மிகவும் தட்டுப்பாடாக இருக்கிறது. நாங்கள் நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டிய நிதியும் எங்களுக்கு வந்து சேரவில்லை. இருக்கிற நிதியையும் பல தடைகளோடு தான் செயல்படுத்த முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதி தடையாக இருக்கிறது. எனவே நிதி நிலை இந்த துறையில் என்றைக்கு சிறப்பாகுதோ அப்போது இந்த அறிவிப்புகள் எல்லாம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார் அமைச்சர் பிடிஆர்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 21 ஆம் தேதியும் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த பிடிஆர் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசினார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் கேள்விக்கு பதிலளித்த ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ‘நிதி மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையின் கீழ் செயல்படுவதில்லை. ஒரு சிறிய பங்கான ELCOT மட்டும் தான் எங்கள் துறையின் கீழ் செயல்படுகிறது. மீதமுள்ள TIDEL, NEO TIDEL போன்றவை தொழில் துறையின் கீழ் வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும், அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, யாரிடம் நிதியும், திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் நிதி இல்லை’ என்று தெரிவித்தார். Stalin’s continued anger… PTR going to Delhi Rajyasaba
அப்போதே சபாநாயகர் அப்பாவு, ‘அமைச்சர் பிடிஆர் இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் பேசி முடிவெடுக்க வேண்டியது. பாசிட்டிவாக பதில் சொன்னால், உறுப்பினர்களுக்கு நன்றாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

அமைச்சர் பிடிஆரின் இந்த தொடர் பதில்கள் அமைச்சர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தின. முதலமைச்சருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. தனது பதிலில் பிடிஆர் தொழில் துறை அமைச்சரான டிஆர்பி ராஜாவை இடித்துரைக்கும் தொனியும் இருந்தது. அதாவது வேறு மாநிலங்களில் ஐடி துறைக்கென இருக்கும் அதிகாரங்கள் தமிழ்நாட்டில் தொழில் துறையிடம் இருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார் பிடிஆர்.

இந்நிலையில்தான் இன்று நடக்கும் பி்.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வாரா என்ற கேள்வி இன்று காலையிலேயே சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களிடம் விவாதமாக இருந்தது. இதையறிந்த அமைச்சர் பிடிஆர், முதல்வரை சந்தித்து, விழாவுக்கு தாங்கள் கண்டிப்பாக வந்துவிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போதே சட்டமன்றத்தில் அதிகமாக பேசுகிறீர்களே என்று முதலமைச்சர் பிடிஆரை கடிந்துகொண்டார். எனினும் விழாவுக்கு வந்துவிடுவேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதன்பின் முதல்வர் கலைவாணர் அரங்கம் நிகழ்ச்சிக்கு வருவது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்தான மதியம் மாவட்டச் செயலாளர்களான அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு ஆகியோரிடம் தகவல் தரப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட கலைவாணர் அரங்கம் நிரப்பப்பட்டது.

இந்நிலையில் பிடிஆர் பற்றி திமுக மேலிடத்தில் இன்னொரு ஆலோசனையும் நடக்கிறது. ‘பிடிஆர் லோக்கல் பாலிடிக்ஸில் சற்று நெகிழ்ச்சித் தன்மை குறைவாக இருக்கிறார். மதுரையில் அமைச்சர் மூர்த்தியோடு அவருக்கு வாய்க்கால் தகராறு இருக்கிறது. ஏற்கனவே ஐடிவிங் செயலாளராக இருந்த பிடிஆர், அதன் பின் ஐடி விங் செயலாளராக இருக்கும் அமைச்சர் டிஆர்.பி.ராஜாவோடும் சற்று நெருடலோடுதான் இருக்கிறார்.

அதேநேரம் மாநில உரிமைகள், டிலிமிட்டேஷனில் தமிழ்நாட்டின் பாதிப்பு உள்ளிட்ட விவகாரங்களை இந்திய அளவில் மிகத் திறமையாக ஆங்கிலத்தில் கொண்டு சேர்க்கிறார். இந்நிலையில் மாநில அரசியலோடு சற்று ஒவ்வாமையாகவே இருக்கும் பிடிஆரை வருகிற ராஜ்ய சபா தேர்தல் மூலம் டெல்லிக்கு அஞுப்பிவிட்டால் என்ன என்ற ஆலோசனையும் திமுக மேலிடத்தில் நடக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share