சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் கிட்டத்தட்ட வெளியேறியுள்ளது. இந்தியாவிடம் அடைந்த தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்தியாவிடம் தோற்றது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. துபாயில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும்.
உலகிலுள்ள அனைத்து அணிகளும் 6 பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் போது, பாகிஸ்தான் அணியில் 5 பந்து வீச்சாளர்கள் கூட தேர்வு செய்யப்படவில்லை. இரண்டு ஆல்ரவுண்டர்களுடன் விளையாட செல்வது மூளையே இல்லாத செயல். நிர்வாகத்திடம் ஐடியா இல்லாததையே இது காட்டுகிறது. எனக்கு இது மிகுந்த வருத்தத்தை தருகிறது.Brainless pcb management-Akhtar
நாம் குழந்தைகளை (பாகிஸ்தான் வீரர்கள் ) திட்ட முடியாது. டீம் மேனேஜ்மென்ட் போலவே வீரர்களும் உள்ளனர். மைதானத்துக்குள் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை. ரோஹித், விராட், சுப்மன் போன்ற திறமைசாலிகளாக இவர்கள் இல்லை. இவர்களுக்கோ, நிர்வாகத்திற்கோ எதுவும் தெரியாது. எந்த நோக்கமும் இல்லாமல் விளையாடப் போயிருக்கிறார்கள். அதற்கான பலன் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.Brainless pcb management-Akhtar
மேலும், இந்திய வீரர் விராட் கோலியை அக்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். விராட் பற்றி அக்தர் கூறியுள்ளதாவது, “இதற்கு முன்பும் விராட்டின் ஆட்டத்தை பார்த்துள்ளோம். பாகிஸ்தானுடன் ஆடும் போதெல்லாம் சதம் அடித்து விடுவார். ஒயிட் பாலில் சேஸ் செய்வது எப்படி ? என்பதை அறிந்தவர் விராட். அவர் ஒரு சூப்பர்ஸ்டார். மாடர்ன் டே கிரிக்கெட் கிரேட். விராட் குறித்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எத்தகைய பெருமைக்கும் அவர் தகுதியானவர்” என்று கூறியுள்ளார்.