புது கார் வாங்கப் போறீங்களா? செப்டம்பரில் பொதுத்துறை வங்கிகளின் கார் லோன் வட்டி எவ்வளவு?

Published On:

| By Minnambalam Desk

How much EMI will you pay if you take out a loan from state bank of india

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனம் கார் கடன்களின் வட்டி விகிதங்கள் மீது திரும்பியுள்ளது. செப்டம்பர் 2026 நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.35 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஆனால் குறைந்த வட்டி விகிதம் கிடைப்பது கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்ட தகுதிகளைப் பொறுத்தது. 

எந்த வங்கியில் எவ்வளவு வட்டி?

ADVERTISEMENT

Bank of India (BOI) கார் கடனுக்கு 7.35 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கிறது. Bank of Baroda-வில் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலான வட்டி விகிதம் 7.40 சதவீதம் முதல் தொடங்குகிறது.

State Bank of India (SBI) கார் கடன்களுக்கு 7.50 சதவீதம் முதல் வட்டி விகிதத்தை வழங்குகிறது. YONO செயலி மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ரூ.1 லட்சம் கடனுக்கான EMI

வட்டி விகிதத்தில் சிறிய மாற்றம் இருந்தாலும், நீண்ட கால கடனில் அது மாதாந்திர EMI-யில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

7.35 சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் கடனுக்கான மாத EMI சுமார் ரூ.1,526 ஆக இருக்கும். 7.75 சதவீதத்தில் இது ரூ.1,546 ஆகவும், 8.50 சதவீதத்தில் ரூ.1,584 ஆகவும் இருக்கும்.

ரூ.7 லட்சம் கார் கடன் என்றால்?

ஏழு ஆண்டுகளுக்கு ரூ.7 லட்சம் கார் கடன் வாங்கினால், 7.35 சதவீத வட்டியில் மாத EMI சுமார் ரூ.10,682 ஆக இருக்கும். அதே தொகைக்கு 8.50 சதவீத வட்டி விதிக்கப்பட்டால் EMI சுமார் ரூ.11,088 ஆக உயரும்.

கடன் தொகை மற்றும் காலத்தைப் பொறுத்து மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டியிலும் இந்த வித்தியாசம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

CIBIL ஸ்கோர் முக்கியம்

கார் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதில் CIBIL ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. 750 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கோர் இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

700 முதல் 749 வரையிலான ஸ்கோர் இருந்தால் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். 700-க்கும் குறைவான CIBIL ஸ்கோர் உள்ளவர்களுக்கு 8.50 முதல் 9.50 சதவீதம் வரையிலான அதிக வட்டி விகிதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கார் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு தங்களது CIBIL ஸ்கோர் மற்றும் பல்வேறு வங்கிகளின் நிபந்தனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share