share market: சில்லரை முதலீட்டாளர்களுக்கு சாதகமான பங்குகள் இதோ…

Published On:

| By Aara

பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகத்தின்போது ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பு முறையைச் சோதிப்பதற்காக கடந்த  மே 18, சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு அமர்வில் இந்தியப் பங்குகள் ஓரளவு உயர்ந்தன.
மேலும்  கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் பயணித்த பங்குச்சந்தை நான்காவது கட்ட தேர்தலில் உயர்ந்த வாக்கு சதவீதம், கச்சா எண்ணெய் விலையில் உள்ள நிலைத்தன்மை ஆகிய காரணங்களால்  குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது.
ONGC, Indian Railway Finance Corporation (IRFC), Bharat Electronics (BEL), Oil India, SAIL, Triveni Engineering & Industries, Chemplast Sanmar, India Cements, KRBL, Nesco, Rolex Rings, VRL Logistics, Deepak Nitrite, Whirlpool of India, City Union Bank, Redtape, Power Mech Projects உள்ளிட்ட நிறுவனங்கள் நேற்று ( மே 20)  திங்கள்கிழமை நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்தன.
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில்  இன்று ( மே 21) செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்த பங்குகளின் வர்த்தக தாக்கத்தை காணக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மினிரத்னா பொதுத் துறை நிறுவனமான IRFC Q4 முடிவுகளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதன் நிகர லாபம் 33.6 சதவீதம் உயர்ந்து 1,717 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான முடிவுகளை திங்களன்று அறிவித்தது. 24 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டை கணக்கிடும் போது நிகர லாபம் சுமார் 10 சதவீதம் குறைந்து 10,356 கோடியாகக் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டை கணக்கிடும் போது அதன் நிகர லாபம் 40% உயர்ந்து 859.6 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவன பங்குகள் பட்டியலில் உள்ள BEL கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 165 சதவீத லாபமும் , மூன்று ஆண்டுகளில் 285 சதவீத லாபமும் கொடுத்துள்ளது.
ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) அதன் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.
அதன்படி 2023 டிசம்பருடன் முடிவடைந்த 3வது காலாண்டை கணக்கிடுகையில் இந்த நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த நிகர லாபம் 22% சரிந்து 422 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் நான்காவது காலாண்டு முடிவுகள அடிப்படையில் Q4 FY24 ல் நிகர லாபம் 52 சதவீதம் உயர்ந்து 4,308.7 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் தேசிய பங்குச் சந்தையில் (NSE) HAL பங்கு 119.89 சதவீதமும், கடந்த ஒரு ஆண்டில் 204.27 சதவீதத்திற்கும் மேலாக லாபம் கொடுத்துள்ளது இந்த பங்கு.
ஆயில் இந்தியா லிமிடெட்  நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக 2,332.94 கோடி ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இது 2023-24ன் நான்காவது காலாண்டில் 1979 கோடி ஈட்டியதாகவும். OIL நிறுவனத்தின் வாரியம் குழு கூட்டத்தில், 1:2 போனஸை (ஒவ்வொரு இரண்டு பங்கிற்கும் ஒரு இலவச பங்கு) வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குளோபல் ஹெல்த் நிறுவனம் காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 25% அதிகரித்து ரூ.127 கோடியை ஈட்டியதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் ஈட்டிய வரிக்குப் பிந்தைய லாபமாக 102 கோடியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
Awfis Space Solutions IPO மே 22 அன்று திறக்கப்பட உள்ளது. மே 27 வரை விற்பனையில் இருக்கும் இந்த
ஐபிஓ மூலமாக இந்த நிறுவனம் 598.93 கோடியை திரட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மார்க்கெட் தொடக்கம் எப்படி? 

ஜப்பானிய பங்குகள் உயர்ந்தாலும், ஹாங்காங், சீனா மற்றும் ஆஸ்திரேலிய  சந்தைகளில் பங்குகள் குறைந்தன.  கடந்த எட்டு நாட்களாக இந்திய பங்குச் சந்தை முன்னேற்றத்திற்குப் பிறகு ஆசிய நாடுகள் வர்த்தகத்தில் MSCI குறைந்துள்ளதன் தாக்கம் இன்று இந்திய பங்குச் சந்தையில் எதிரொலித்தது. செவ்வாயன்று இந்திய பங்குச் சந்தை முக்கிய குறியீடுகள் இயக்கத்துடன் திறக்கப்பட்டன.
சென்செக்ஸ் 183.60 புள்ளிகள் குறைந்து 73,822.34 ஆகவும், நிஃப்டி 11.10 புள்ளிகள் குறைந்து 22,490.90 ஆகவும் தொடங்கியது.
கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், வேர்ல்பூல், சோலாரா ஆக்டிவ் பார்மா, டிசிஎஸ், நெஸ்லே இந்தியா, பிஹெச்இஎல், என்எம்டிசி, பிஐ இண்டஸ்ட்ரீஸ், ஹிட்டாச்சி எனர்ஜி, இர்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளதால் இந்த பங்குகள் காரணமாக சில்லறை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டும் பட்டியலில் Balkrishna Industries, Hindustan Zinc, Bharat Dynamics, Cadila Healthcare, Cochin Shipyard, HAL, and BEL ஆகிய பங்குகள் உள்ளன.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் NMDC, LTI Mindtree, Dabur, RITES, Indian Overseas Bank, SAIL நிறுவன பங்குகள் தின வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் பங்குகள் என பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மணியன் கலியமூர்த்தி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share