தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டுமே 150 கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சீமான் நேற்று பிரசாரத்தின் போது கூறியதாவது: தம்பி விஜய் கதாநாயகன் என்றார். 150 பேரை ஒட்டுப்போட்டு ஒரு சட்டை தைத்தது போல, 10 வீட்டில் கையேந்தி சாப்பாட்டை சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்குனது போல, லெட்டர் பேடு கட்சிக்காரனை எல்லாம் எந்த கட்சியில சீட்டு குடுக்கலையோ அவனையெல்லாம் ராத்திரியோடு ராத்திரியில் பிடிச்சு வந்து 150 பேருக்கு சீட்டு கொடுத்து நிறுத்திருக்கார்..
கேட்டால் யாரோடும் கூட்டணி இல்லை என்கிறார். அவர்தான் அதிகமாக ஐயா ஸ்டாலின் 22 கட்சி, ஐயா எடப்பாடி 10 கட்சி, இவரு 150 கட்சியோட கூட்டணி வைத்தவர் அவர்தான்.
அன்பார்ந்த சொந்தங்கள் கவனிக்கணும். ஒரு தலைவன் தன் மண்ணையும் மக்களையும் முழுமையாக நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும். நாங்கள் முழுமையாக நம்புகிறோம், நேசிக்கிறோம். அதனால் மக்களை நம்பியே களத்திலே நிற்கிறோம். இதுக்கு மேல எங்களை நீங்கள் தோற்கடிக்கவே முடியாது. அவ்வளவு தூரம் தோற்கடித்து இருக்கிறீர்கள். ஆனால் தோற்றுப்போன பிள்ளைகள் போல நானோ என் பிள்ளைகளோ உங்கள் முன்னே நிற்கவில்லை. நிமிர்ந்து நிற்கிறோம்.
ஒரு பொறுப்பற்ற சமூகத்தை உருவாக்க உன் மகன் தயாராக இல்லை ஓசின்னா எனக்கொன்னு எங்கப்பனுக்கொன்னுன்னு கேட்பான் இவன். இலவசம் எதுவும் இல்லை. இலவசம்ங்கிற சொல்லே என் மண்ணுல இல்லை. ஒழிச்சிருவேன். ‘பசி’ என்ற வார்த்தை பைந்தமிழர் நாட்டில் இனி இருக்காது ஒழிச்சிருவேன். எப்படி ஒழிப்ப? நானே விவசாயம் செய்வேன். இவ்வாறு சீமான் பேசினார்.
