துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
நடிகர்கள் அர்ஜுன், பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் – ஆதிக் கூட்டணியில் AK 63 படம் உருவாக இருக்கிறது என்றும் அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் அஜித்தின் 64 வது படத்தை இயக்க போகிறார் என்ற தகவலும் வெளியானது. இந்த படத்தை விடுதலை படத்தை தயாரித்த ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அஜித்தை வைத்து படம் எடுத்தால் அஜித்தின் சம்பளம் மற்றும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருக்கும், மேலும் அந்த படம் லாபமாக அமையாது என்று ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் கருதியதால் அஜித் படத்தை ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் சத்தமில்லாமல் கை கழுவி விட்டதாகவும் சில தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“பாலியல் தொல்லை – சாக அனுமதி கொடுங்கள்” : தலைமை நீதிபதிக்கு பெண் நீதிபதி கடிதம்!
கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்குக்கு ஜாமீன்!