ராயல் என்பில்டு நிறுவனம் ‘ஹிமால்யன்’ என்ற பெயரில் புது பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது.
ஏற்கனவே இந்த மாதத் தொடக்கத்தில் பைக்கின் அறிமுக விழாக்கள் கர்நாடகா, மே.வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடத்தப்பட்டிருந்தது. பருவகாலங்களில் ‘பைக் ரைடு’ செய்பவர்களை கவரும் வகையில் இது வடிமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளிலும், கடுமையான நிலப்பகுதிகளிலும் ‘கெத்தாக’ பறக்க நினைப்பவர்களுக்கு இந்த பைக் வரப்பிரசாதமாகும்.
இந்த பைக் 5 கியர் வசதி, 24.5 பிஹெச்பி என்ஜின் ஆகியற்றோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் முக்கியத்துவம் கொடுத்துவரும் 250 -750 சிசி தயாரிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இதன் விலை சுமார் 1லட்சத்து 73 ஆயிரம் ஆகும்.