அரிசி தண்ணீரால் (Rice Water) சரும பாதுகாப்பு (Skin Care) உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
கோடைக் காலத்தில் நமது சருமம்தான் மிகவும் பாதிப்படைகிறது. சருமத்தை பாதுகாக்க லோஷன்கள், சன் ஸ்கிரீன்கள் (Sunscreens) க்ரீம்கள் என பலவற்றையும் நாம் முயற்சி செய்து பார்ப்போம். ஆனால், இயற்கையாக எந்தவித செலவும் இல்லாத நமது வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நாம் சருமத்தை பாதுகாக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதில் ஒன்றுதான் அரிசி தண்ணீர். இது ஒரு சிறந்த சருமப் பராமரிப்புப் பொருளாகக் கருதப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், இயற்கையான பொலிவைத் தரவும் உதவுகின்றன. இதைத் தினமும் முகத்திற்குப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தில் பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
அரிசி தண்ணீரை எப்படி முகத்திற்கு பயன்படுத்துவது?
ஒரு கைப்பிடி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் (Rice water for skin) இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் தண்ணீரை வடிகட்ட வேண்டும். சிறிதளவு தேன் மற்றும் கற்றாழையை அதில் சேர்த்து நன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கவும். ஒரு வாரத்திற்கு தேவையான வகையில் அதனை தயார் செய்ய வேண்டும். இதை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். அரிசி தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் சரும நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
சருமத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது
அரிசி நீர் ஒரு இயற்கையான சுத்திகரிப்பானாக (cleanse the skin) செயல்படுகிறது. அதன் துவர்ப்புப் பண்புகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை அகற்ற உதவுகின்றன. இதனால் முகம் சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
சூரிய ஒளி மற்றும் கருமையிலிருந்து பாதுகாப்பு
உங்கள் முகத்தை அரிசி நீரால் தவறாமல் கழுவுவது, வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சல் (Protection from sunlight and darkness) மற்றும் பாதிப்புகளைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துவதோடு, நிறமாற்றம் மற்றும் கருமையைக் குறைக்கவும் உதவுகிறது. அரிசி நீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் தன்மையை மேம்படுத்துகின்றன. இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது, இதன் விளைவாக ஆரோக்கியமான, பொலிவான தோற்றம் கிடைக்கிறது.
முகப்பருவிலிருந்து நிவாரணம்
அரிசி தண்ணீரில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (Relief from acne) சரும அழற்சியைக் குறைக்கின்றன. இது முகத்தில் உள்ள தீவிரமான முகப்பருக்கள், சிவத்தல், வீக்கம் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும். இதனால் சருமம் தெளிவாகவும் பொலிவுடனும் காணப்படும்.
சருமத்தின் சுருக்கங்களை குறைக்கிறது
அரிசி நீருக்கு வயதாவதைத் தடுக்கும் பண்புகளும் (Reduces skin wrinkles) இருப்பதாகக் கருதப்படுகிறது. இது இளமையான சருமத்தைப் பராமரிக்கவும், சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளைக் குறைக்கவும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
