இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கியது. repo rate decreased by rbi
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதி கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து 6.25 சதவீதமாக அறிவித்தது
இதன் விளைவாக வீடு, தனிநபர், வாகன கடன்கள் மற்றும் டெபாசிட் விகிதங்கள் மீதான வட்டி விகிதங்கள் வரும் நாட்களில் குறையும்.
கடன் வாங்குபவர்களுக்கு கடனின் வட்டி விகிதம் குறைப்பு என்பது சற்று ஆறுதல் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
அதுவே வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டி விகிதம் குறைவதன் மூலமாக அவர்களுக்கான பலன்கள் சற்று குறைகிறது.
2025 – 26 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்ட 6.7 சதவீதத்திலிருந்து 6.5% சதவீதமாக குறைக்கவும் மற்றும் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4% ஆக இருக்கும் என மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு கட்டணங்கள் அறிவித்ததை தொடர்ந்து, அதனால் உலக சந்தையில் பதற்றமும் நிச்சயமற்ற தன்மையும் அதிகரித்து உள்ள நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
ரெப்போ ரேட் என்றால் என்ன? repo rate decreased by rbi
சாமானிய மக்கள் எப்படி வங்கிகளிடம் கடன் வாங்குகிறோமோ அதுபோல் வங்கிகள் மத்திய அரசு வங்கியிடம் கடனை வாங்கும்.
நாம் வாங்கும் கடனுக்கு எப்படி வங்கிகள் வட்டியை விதிக்கிறார்களோ அதுபோல் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும்.
இந்த வட்டி விகிதமானது ஒவ்வொரு முறையும் மாற்றி அமைக்கப்படும்.
நாட்டினுடைய பொருளாதார சிறத்தன்மைக்கு ஏற்றவாறு மத்திய அரசு வங்கி இந்த ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்.
வங்கியில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் மக்கள் அதிக அளவிற்கு கடன்களை வாங்கினால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் இதனால் பணவீக்கம் அதிகமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது இதனால் வங்கிகள் சில நேரங்களில் விகிதத்தை உயர்த்துவதற்கு காரணங்களாக அமைகிறது.
சில நேரங்களில் நாட்டில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் பட்சத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதற்கு ஒரு காரணியாக இருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மந்த நிலை ஏற்பட்டுள்ளதும், சாமானிய மக்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு கூட பணத்தை செலவழிக்க முடியாத காரணமும் ரெப்போ வட்டி விகிதம் குறைந்ததற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைகிறது.
சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி கட்டும் நபர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு தரப்பட்டுள்ளது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. repo rate decreased by rbi