நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக பீகாரின் உள்ள கண்டக் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டம் வால்மீகிநகரில் அமைந்துள்ளது கண்டக் அணை. இது நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கம், பனிப் பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளம் அப்படியே சீறிப் பாய்ந்து, நாராயணி நதியில் கலந்து இந்த கண்டக் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

கண்டக் அணைக்கான நீர்வரத்து நேற்று இரவு 7.30 மணிக்கு 1,04,400 கன அடியாக இருந்தது. ஆனால் இரவு 08:30 மணி நிலவரப்படி இது 1,14,000 கன அடியாக அதிகரித்தது. பின்னர் இரவு 09:00 மணி நிலவரப்படி 1,26,500 கன அடியாகவும் 09:30 மணி நிலவரப்படி: 1,36,700 கன அடியாகவும் உயர்ந்தது.
அதே நேரத்தில் கண்டக் அணையில், மொத்தம் உள்ள 36 மதகுகளும் திறக்கப்பட்டு சுமார் 2,00,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனையடுத்து பீகாரின் சம்பாரன் மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
