மொபைல் பிராசஸர் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற குவால்காம் (Qualcomm) நிறுவனம் இந்திய அளவில் ஒரு மெகா ‘சாஃப்ட்வேர் இன்ஜினியர்’ (Software Engineer – Freshers) அசோசியேட் அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. ஸ்மார்ட்போன்களுக்குத் தேவையான ஸ்னாப்டிராகன் (Snapdragon) பிராசஸர்களைத் தயாரிக்கும் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm), இந்தியாவில் உள்ள தங்களது 4 முக்கிய கிளைகளில் காலியாக உள்ள சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிரடி ஆன்லைன் விண்ணப்பப் பதிவைத் தொடங்கியுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்?
பணியின் பெயர்: அசோசியேட் சாஃப்ட்வேர் இன்ஜினியர் (Associate Software Engineer / Engineer, Graduate) – Freshers.
கல்வித்தகுதி: நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (IT), எலக்ட்ரானிக்ஸ் (ECE) அல்லது அதற்கு இணையான பொறியியல் பிரிவுகளில் பி.இ / பி.டெக் (B.E / B.Tech), எம்.இ / எம்.டெக் (M.E / M.Tech) அல்லது எம்சிஏ (MCA) முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி பெற்ற ஆண்டுகள்: 2025 அல்லது 2026-ஆம் ஆண்டுகளில் கல்லூரியிலிருந்து படித்து முடித்து வெளிவரும் பிரெஷர்கள் (Freshers) மற்றும் 0-1 வருடக் குறைந்தபட்ச அனுபவம் உள்ளவர்கள் இதற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்!.
பணியிடங்கள் (Locations):
- சென்னை (Chennai, Tamil Nadu)
- பெங்களூரு (Bengaluru, Karnataka)
- ஹைதராபாத் (Hyderabad, Telangana)
- நொய்டா (Noida, Uttar Pradesh)
என்னென்ன திறமைகள் தேவை?
புரோகிராமிங் அறிவு: சி (C), சி++ (C++), ஜாவா (Java) அல்லது பைதான் (Python) ஆகிய புரோகிராமிங் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பக்கா ஸ்ட்ராங்கான கோடிங் அறிவு இருக்க வேண்டும்.
அடிப்படை கம்ப்யூட்டர் நாலேட்ஜ்: டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures & Algorithms), ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் (OS) மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் பற்றிய அடிப்படை விவரங்கள் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும் பாஸ்.
கம்யூனிகேஷன்: சர்வதேச ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதால், ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும், பிழையின்றித் தொடர்பு கொள்ளும் திறனும் (Good Communication Skills) கூடுதல் பிளஸ் பாயிண்ட் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது?
முதலில் குவால்காம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வதேசக் கரியர் இணையதளமான qualcomm.com/company/careers என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ‘Jobs’ பிரிவில் “Software Engineer” அல்லது “Engineer, Graduate” என்று தேடி, சென்னை அல்லது உங்களுக்கு விருப்பமான லொகேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்களது செல்லுபடியாகும் மின்னஞ்சல் (Email ID) மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துப் புதிய கணக்கை உருவாக்குங்கள். அதன் பிறகு உங்களது தொழில்முறை விபரங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உங்களது புதுப்பிக்கப்பட்ட ரெஸ்யூமை (Updated Resume/CV) துல்லியமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்துவிட்டு ‘Submit’ பட்டனை தட்டி ஆன்லைன் விண்ணப்பத்தை வெற்றிகரமாகச் சமர்ப்பித்து விடுங்கள்!
குவால்காம் போன்ற டாப் நிறுவனங்கள் அப்ளிகேஷன்களை பில்டர் செய்ய ATS (Applicant Tracking System) மென்பொருளைப் பயன்படுத்துவாங்க. அதனால உங்க ரெஸ்யூம்ல C, C++, Data Structures, Problem Solving போன்ற கீவேர்டுகளை (Keywords) மறக்காம ஹைலைட் பண்ணி வைங்க, அதுதான் உங்க அப்ளிகேஷனை ஷார்ட்லிஸ்ட் செய்ய உதவும்!.
தமிழ்நாட்டுத் தம்பிகள் மற்றும் தங்கச்சிகள் தங்களது சொந்த மாநிலத்திலேயே, சென்னையிலேயே தங்கி ஒரு மிகப்பெரிய உலகத்தரம் வாய்ந்த செமிகண்டக்டர் கம்பெனியில வேலை பார்க்க இது ஒரு அரிய ‘கோல்டன் டிக்கெட்’.
ஆன்லைன் அப்ளிகேஷன் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு ஆன்லைன் ஆப்டிடியூட்/கோடிங் தேர்வு (Online Coding Test) மற்றும் அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 கட்டத் தொழில்நுட்ப நேர்காணல்கள் (Technical & HR Interviews) மூலமாகத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த மாதிரியான மெகா எம்என்சி நிறுவனங்களின் பிரெஷர்ஸ் அப்ளிகேஷன் லிங்க், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் வந்த உடனே க்ளோஸ் ஆகிடும்!. அதனால “அப்புறம் பாத்துக்கலாம்”னு அசால்ட்டா இருக்காம, லிங்க் ஆக்டிவா இருக்கும்போதே இன்னைக்கே உங்க ஆன்லைன் அப்ளிகேஷனைத் தட்டி விடுங்க.
கார்ப்பரேட் உலகத்துல அதுவும் குவால்காம் போன்ற ஒரு பிரம்மாண்ட டெக்னாலஜி பிராண்ட்ல சாஃப்ட்வேர் இன்ஜினியரா உங்க ஐடி கரியரைத் தொடங்குறது உங்க வாழ்க்கையையே வேற லெவலுக்கு மாஸா மாத்தும் பாஸ். 2025 மற்றும் 2026-ல் பாஸ் அவுட் ஆகுற தம்பிகள் இந்த மெகா அட்வான்டேஜைப் பயன்படுத்தி இந்த வாய்ப்பைத் தட்டித் தூக்குங்க. முயற்சி பண்ணuனா இந்த மே மாசத்துல நீங்களும் ஒரு மாஸான குவால்காம் சாஃப்ட்வேர் இன்ஜினியரா மாறி அசத்தலாம்.
