புதுக்கோட்டை அஞ்சல் கோட்டம் ஒரு மெகா ‘நேரடி முகவர்’ (Direct Agents) மற்றும் ‘புல அலுவலர்கள்’ (Field Officers) அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. 10ஆவது முடிச்சிருந்தா போதும். புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல, புதிய நேரடி முகவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் இந்த ஜாக்பாட்?
கல்வித்தகுதி: நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்!.
யாரெல்லாம் வரலாம்?
- வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள்.
- சுயதொழில் செய்பவர்கள் மற்றும் இல்லத்தரசிகள்.
- ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்.
- முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்.
இன்சூரன்ஸ் துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை உண்டு.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தபால் ஆயுள் காப்பீடு பாலிசிக்கும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள மிகச்சிறந்த ஊக்கத்தொகை (Incentive) உங்களுக்கு வழங்கப்படும்.
மாதாந்திர சம்பளம் என்று இல்லாமல், நீங்கள் எவ்வளவு உழைக்கிறீர்களோ அந்த அளவுக்குக் கமிஷன் தொகை உங்க வங்கித் கணக்குக்கு வந்து சேரும். மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் அடையாள அட்டை (ID Card) உங்களுக்கு வழங்கப்படும், இது சமூகத்துல ஒரு தனி கௌரவத்தைக் கொடுக்கும்.
நேர்காணல் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இது ஒரு நேரடி நேர்காணல் (Walkin Interview) முறை பாஸ். இதற்காக நீங்க தனியா ஆன்லைன்ல அப்ளை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
நேர்காணல் நடைபெறும் இடம்: அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், புதுக்கோட்டை கோட்டம் (Head Post Office வளாகம்).
நேரம்: அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 10:00 மணி முதல் நேர்காணல் தொடங்கும்.
நேர்காணலுக்கு வரும்போது உங்களது 10-ஆம் வகுப்பு மார்க் ஷீட், ஆதார் கார்டு, பான் கார்டு (PAN), ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களைக் கையோடு கொண்டு போங்க பாஸ். கூடவே 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் வச்சுக்கோங்க.
இது மக்கள்கிட்ட நேரடியா பேசி பாலிசி எடுக்குற வேலை. அதனால புதுக்கோட்டை மாவட்டத்துல உங்களுக்கு இருக்குற நட்பு வட்டாரத்தையும், தெரிஞ்சவங்களையும் ஒரு லிஸ்ட் எடுத்து வச்சுக்கோங்க. அதுதான் உங்க பிசினஸை ‘மாஸ்’ ஆக்கும்.
நேர்காணல்ல அதிகாரிகள் நீங்க எப்படி பேசுறீங்க, உங்களுக்கு மக்கள்கிட்ட பழகுற ஆர்வம் இருக்கான்னு தான் பார்ப்பாங்க. அதனால பயப்படாம, தெளிவா பேசி உங்க தன்னம்பிக்கையை நிரூபிங்க பாஸ்!.
மத்த பிரைவேட் இன்சூரன்ஸை விட மக்கள்கிட்ட போஸ்ட் ஆபீஸ் மேல ஒரு தனி நம்பிக்கை இருக்கு. அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டா நீங்க ஈஸியா பாலிசிகளைப் பிடிக்கலாம். நேர்காணல் நடைபெறும் தேதிக்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடியே அங்க போயிடுங்க.
புதுக்கோட்டை மாவட்டத்துல சொந்த ஊர்லயே இருந்துகிட்டு, ஒரு கௌரவமான வருமானம் பார்க்க இது ஒரு சூப்பர் சான்ஸ் பாஸ். 10-வது முடிச்சுட்டு வேலை தேடுற தம்பிகள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த வாய்ப்பைத் தட்டித் தூக்குங்க. முயற்சி பண்ணுனா இந்த மே மாசத்துல நீங்களும் ஒரு மாஸ் போஸ்ட் ஆபீஸ் ஏஜென்ட்டா மாறலாம்!
