திருச்சி விமான நிலையத்துல ‘மாஸ்’ வேலை! 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் காலியிடங்கள்

Published On:

| By Santhosh Raj Saravanan

aaiclas security screener recruitment 2026 trichy airport apply online details

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அலைட் சர்வீசஸ் (AAICLAS) நிறுவனம் ஒரு மெகா ‘செக்யூரிட்டி ஸ்கிரீனர்’ (Security Screener) வேலைவாய்ப்பு அறிவிப்பைத் தட்டி விட்டுருக்கு. 158 பணியிடங்கள்… 34,000 வரை சம்பளம்…

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் இயங்கும் AAICLAS நிறுவனம், 2026-2027 கல்வியாண்டிற்கான 158 செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener – Fresher) பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் திருச்சி விமான நிலையத்தில் மட்டும் கணிசமான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் வேணும்னு ஒருமுறை ‘Check’ பண்ணிக்கோங்க பாஸ்:

பணியின் பெயர்: செக்யூரிட்டி ஸ்கிரீனர் (Security Screener – Fresher).

ADVERTISEMENT

மொத்தப் பணியிடங்கள்: 158 இடங்கள் (திருச்சி, கொல்கத்தா, கோழிக்கோடு, டேராடூன், பாட்னா மற்றும் உதய்பூர் விமான நிலையங்கள்).

திருச்சிக்கு மட்டும்: 158 இடங்களில் திருச்சி விமான நிலையத்திற்கு மட்டும் 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கல்வித்தகுதி: நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு (Any Graduation) முடித்திருக்க வேண்டும்.

மதிப்பெண் வரம்பு: பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் இபிடபிள்யூஎஸ் (Gen/OBC/EWS) மாணவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், எஸ்சி/எஸ்டி (SC/ST) மாணவர்கள் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

மொழித் தகுதி: உங்களுக்கு ஆங்கிலம், ஹிந்தி அல்லது உள்ளூர் மொழியில் (தமிழ்) பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் பாஸ்!.

வயது வரம்பு: 01.05.2026 நிலவரப்படி, 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு உண்டு!).

சம்பளம்: மாதம் 30,000 முதல் 34,000 ரூபாய் வரை கௌரவமான சம்பளம் வழங்கப்படும்.

வேலை என்ன? எப்படி இருக்கும்?

விமான நிலையத்தில் வரும் கார்கோ (Cargo) மற்றும் பயணிகளின் உடைமைகளை எக்ஸ்ரே (X-ray) கருவிகள் மூலம் ஸ்கேன் செய்வது தான் உங்களது முக்கிய வேலை. தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் செல்கிறதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய வேண்டும். விமான நிலையப் பாதுகாப்பு தொடர்பான இதர பணிகளிலும் நீங்கள் ஈடுபடுத்தப்படுவீர்கள்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மாணவர்கள் AAICLAS-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.aaiclas.aero என்ற கரியர் (Careers) பக்கத்திற்குச் சென்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு ரூ. 750. எஸ்சி/எஸ்டி, பெண்கள் மற்றும் இபிடபிள்யூஎஸ் மாணவர்களுக்கு வெறும் 100 ரூபாய் மட்டும் தான் பாஸ்!

நீங்கள் டிகிரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் முதலில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் நேர்காணல் (Online Interaction/Interview) நடைபெறும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 8, 2026 ஆகும்.

செக்யூரிட்டி ஸ்கிரீனர் வேலைக்கு ‘Unimpaired Vision and Hearing’ ரொம்ப முக்கியம் பாஸ்!. அதாவது நிறக்குருடு (Color Blindness) இல்லாத தெளிவான பார்வை இருக்கணும்.

அப்ளிகேஷன் போடும்போது உங்க டிகிரி மார்க்கை பர்சன்டேஜ்ல (Numeric Form) மட்டும் தான் கொடுக்கணும். சிஜிபிஏ (CGPA) முறையில கொடுக்காதீங்க, அது உங்க அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ண வச்சிடும். நீங்க ஏதேனும் ஒரு விமான நிலைய இடத்திற்கு (உதாரணமாக திருச்சி) மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பல இடங்களுக்கு அப்ளை பண்ணக் கூடாது!.

ஜூன் 8 வரை டைம் இருக்குன்னு அசால்ட்டா இருக்காதீங்க. கடைசி நேரத்துல சர்வர் பிஸி ஆக வாய்ப்பு இருக்கு, அதனால உடனே அப்ளை பண்ணிடுங்க! விமான நிலையத்துல ஒரு கௌரவமான சென்ட்ரல் கவர்மெண்ட் கம்பெனியில கால் பதிக்க இது ஒரு அருமையான சான்ஸ் பாஸ். திருச்சி தம்பி, தங்கச்சிகள் இந்த 28 இடங்கள்ல உங்களுக்கான ஒரு சீட்டைத் தட்டித் தூக்க இப்போவே தயார் ஆகுங்க. முயற்சி பண்ணுனா இந்த ஜூன் மாசத்துல நீங்களும் ஒரு மாஸ் செக்யூரிட்டி ஸ்கிரீனரா மாறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share