மகாரத்னா பி.எஸ்.யு-வில் மெகா வேலைவாய்ப்பு
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation of India Limited – POWERGRID) நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான நான்-எக்ஸிக்யூட்டிவ் (Non-Executive) பணியிடங்களுக்கான பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 660 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எந்த பணிகளுக்கு ஆட்சேர்ப்பு?
இந்த அறிவிப்பில் பல்வேறு பதவிகள் உள்ளன. டிப்ளமோ ட்ரெய்னி (Diploma Trainee – Electrical / Civil / Survey), ஜூனியர் ஆபிசர் ட்ரெய்னி (Junior Officer Trainee – HR / F&A), ஜூனியர் டெக்னீஷியன் ட்ரெய்னி (Junior Technician Trainee – Survey) என தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பணிகள் அடங்கும்.
இந்த வேலைவாய்ப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் பயிற்சி காலத்தில் 21,000 – 24,000 ரூபாய் அடிப்படை சம்பளம், பயிற்சி முடிந்த பின் வருடத்திற்கு சுமார் ₹10.9 லட்சம் முதல் ₹12.7 லட்சம் வரை (CTC) என்பதாக இருக்கும். மேலும், டிஏ, ஹெச்.ஆர்.ஏ, மருத்துவ வசதி, PF, பென்ஷன் போன்ற பல சலுகைகளும் வழங்கப்படும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ (Diploma – Engineering), ஐ.டி.ஐ (ITI – Survey / Technical Trade), பட்டப்படிப்பு (Degree – BBA / BBM / BBS), சி.ஏ / சி.எம்.ஏ இன்டர்மீடியேட் (CA / CMA – Inter) போன்ற தகுதிகள் தேவையாகும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சம் 27 வயது, அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 11, 2026, (ஆன்லைன் – Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இந்த ஆட்சேர்ப்பில் தேர்வு கம்ப்யூட்டர் பேஸ்ட் டெஸ்ட் (Computer Based Test – CBT), ஸ்கில் டெஸ்ட் / ட்ரேட் டெஸ்ட், மெடிக்கல் பரிசோதனை மூலம் நடைபெறும்.
மகாரத்னா பி.எஸ்.யு நிறுவனத்தில் இந்த வேலைவாய்ப்பு உயர்ந்த சம்பளம் மற்றும் சலுகைகள், இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு, நீண்டகால வேலை பாதுகாப்பு என மிகவும் பெரிய வாய்ப்பாகும்.
660 காலியிடங்களுடன் வெளியாகியுள்ள POWERGRID வேலைவாய்ப்பு 2026, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டதாரிகளுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். நண்பர்களே, இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாமல் உடனே விண்ணப்பித்து உங்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்து கொள்ளுங்கள்!
