பிரபல ஹிந்தி டிவி நடிகையான பிரதியுஷா பானர்ஜி (24) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை மின்விசிறிக் கம்பியில் துப்பட்டாவால் தூக்குமாட்டிய நிலையில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மும்பை போலீசார், பிரதியுஷாவின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மும்பை கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரதியுஷா தற்கொலை கடிதம் எதுவும் எழுதிவைக்காத நிலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இவர் ‘பாலிகா வது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகிய ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் பிரபலமானவர். இதில் பாலிகா வது, தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ராஜ் டிவி-யில் மண்வாசனை என்ற பெயரில் வெளியானது. டிவி சீரியல்கள் தவிர, பிக் பாஸ் 7 என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவர் பங்கேற்றுள்ளார். இந்த தற்கொலை குறித்து பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி, கடந்த சில தினங்களாகவே பிரத்யுஷா சோகமாக இருந்ததாகவும் அதற்கு, அவளது வருங்காலக் கணவர் ராகுலே காரணம் என்றும் தெரிவித்துள்ளார். ராகுலிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.