முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவிய அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.35 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: இரட்டை இலையிலே வெற்றி பெற்று கட்சி மாறின எம்.எல்.ஏ அத்தனை பேருக்கும் நபர் ஒன்றுக்கு 35 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இந்த மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றுவதற்காக நபர் ஒன்றுக்கு 35 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய ஓட்டை வாங்கி உங்களை ஏமாற்றிய அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பதற்காகத்தான் தாராபுரம் இடைத்தேர்தலும், மதுராந்தகம் இடைத்தேர்தலும் வந்திருக்கிறது. அதாவது மரகதம் குமரவேல், இங்கே தாராபுரத்துல சத்யபாமா – ரெண்டு பேரு, அவங்க பேர சொல்றதுக்கே எனக்கு வாய் வரமாட்டேங்குது.
ரெண்டு பேரும் இரட்டை இலையில நின்னு வெற்றி பெற்றவங்க. தவெகவைவிட 40,000 ஓட்டு, விசிலை விட 40,000 ஓட்டு இரட்டை இலையில கூடுதலாக பெற்று தாராபுரத்துல வெற்றி பெற்றாங்க. எதுக்காக இந்த அம்மா ராஜினாமா பண்ணாங்கன்னு அந்த அம்மாவை இன்னைக்கு வரைக்கும் அந்த அம்மா சொல்லவில்லை. அதாவது இந்த ஆட்சி ஜெயிச்சிருந்தா, நம்ம ஆட்சி வந்திருந்தா இந்த கட்சியில இருந்திருப்பாங்களாம், ஆட்சி வராததுனால ஆளுங்கட்சிக்கு போகணுமா, அதுக்காக ராஜினாமா பண்ணிட்டு போயிருக்காங்க. இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
